சொல்லுபா...சொல்லு.
_____________________________________
என்ன யோசிச்சிட்டயா..
மாத்தியெல்லாம்
யோசிக்க வேண்டாம்.
மாத்தாமலேயே யோசி..
இதே மொழி .
இதே மக்கள்.
இதே இனம்.
சரி தான்.
கடவுள்...
இது எல்லாத்துக்கும் மேலே..
மேலேயா? கீழேயா?
சிறிசா? பெரிசா?
எவ்வளவுண்ணு கணக்கு உண்டா?
பில்லியன் பில்லியன்...பில்லியனா..
அல்லது
ஒண்ணை
பில்லியன்...பில்லியன்..பில்லியனா..
கூறு போடணுமா?
கடவுள்
எல்லா உயிரிலேயும்
மரம் மட்டையிலேயேயும்
மண்ணாங்கட்டியிலேயும்
வானத்துல...அண்டத்துல..
காத்துல கடல்ல..
எல்லாத்துலேயும் கடவுள் இருக்காரா..
அட!
அதெல்லாம் ஏன்
அதுல இலண்ணு
சொல்லிகிட்டு..
கடவுள்தான்...எல்லாமே.
இல்லேணாக்கா..
எல்லாமே..எல்லாந்தான்...
இல்லேண்ணும் வச்சுக்க.
இருக்குண்ணும் வச்சுக்க..
"மனுஷங்களுக்கு மனுஷ்ங்க.."
ஒட்டி வாழணும்ங்க்ற
நேசபாசம் வேணும்பா"
ம்ம்..சொல்லுபா..சொல்லுபா..
சொல்லு..
அவனைத்தொடாதே..
இவனைத்தொடாதே..
தீட்டு..
அப்புறம் "ஜலம்" தெளிக்கிறது..
மந்திரம்..யந்திரம்..
அந்த மதம்..இந்த மதம்
இத்யாதி இத்யாதி...ண்ணு
புடோசர் கொண்டாந்து
இடிக்கிற வரைக்கும் வந்துட்டெ..
இந்த
"ளொள்ளையெல்லாம் தான்
இடிச்சு தர மட்டம் ஆக்கணும்.
இத மட்டும் நீ
வச்சு செஞ்சா போதும்.
வேற ஒண்ணும் நீ
மாத்தி யொசிக்கவே வேண்டாம் போ!
___________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக