பூசணிக்காய்கள்.
_____________________________________
குதிரை வியாபாரம்
ஆரம்பிச்சிட்டாங்களா என்ன?
அப்படி இப்படி
சின்ன வியாபாரமா இது?
ஒரு சுண்டைக்காய்க்கும்
கூட
பூசணிக்காய்கள்
மூட்டை மூட்டையாக
கொடுத்து
"அமுக்கல்" தானே
இங்கு மாமூல் ஜனநாயகம்!
இந்த ராட்சச உருட்டில்
பிரம்மமாவது? கிரம்மமாவது?
அத்துவைதமாவது?
அந்து போன துவைதமாவது?
இந்திய மக்களே இந்திய மக்களே
என்று சொல்லி
குடலை உருவி
இந்து மக்களே இந்து மக்களே
என்று
வெறியேற்றிய
"வர்ணக்கொடிகளை"
தூக்கிக்கொண்டார்கள்.
அது சாதுங்க..
விடுங்க..
அது பாட்டுல கெடக்கும்னு
கிளி ஜோஸ்யம்
பாத்துக்கிட்டிருந்தோங்க!
இப்ப பாருங்க
கோரைப்பல் காட்டி
கூர் நகம் வீசி
நூற்றாண்டு விழாவெ
கோண்டாடப்போவதுங்க்ராங்களே.
இப்ப "கிலி ஜோஸ்யம்" தான்
பாக்குறொம்.
அரசியல் சாசனம் இருக்குமா?
இருக்காதா?
எதுக்குலே..
அதாம் மடி நெறைய
வச்சிருக்கியேலெ
"மனு சாஸ்திரம்..?"
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக