தமிழ் வாழ்க!
___________________________________
கவிதையா அது?
ஆயிரம் மின்னல்கள்
தெறித்த
மின் தமிழ்ப்பிரளயம்.
ஜனநாயக நீதியை
நிலை நாட்டிய
ஒரு மாபெரும் நீதியை
சொல் முரசு கொட்டி
தமிழின் புறநானூற்றை
கோடிப்புயல் தோரணங்களாய்
அசைந்தாடச்செய்த
அரிய தொரு "வரிக்கூட்டம்!".
மேல் கணக்கு
கீழ்க்கணக்கு
என்றெல்லாம்
வரம்பு கட்டாத
ஒரு "இமய வரம்பின்'
இமைகளை உயர்த்திய
தமிழ் மூச்சுகளின்
தனிப்பெரும் செங்கடல்
அலைகள் கொப்பளிக்கும்
சீற்றம் தந்த ஏற்றம் இது!
நீதி காக்க வந்த நெடுமாறன்களாய்
அந்த கருப்பு அங்கிகளின்
சொற்போருக்குள் எல்லாம்
நெருப்பு வீசியதன்
"யாப்பிலக்கணம்" அல்லவா
உங்கள்
எழுத்துக்களின் எழுச்சி!
தமிழ் ஆட்சியின்
தமிழ்த்தலைம தந்த
தங்க விடியலுக்கு
புனைந்த "வைர மகுடம்"
அல்லவா
உங்கள் கவிதைப் பேரொளி!
கலித்தொகைக்குள்ளிருந்து ஒரு
புலித்தொகையும்
மீசைகள் முறுக்கும்
என்று
இன்று அறிந்திடுவார்!
இன்பத்தமிழ் நாட்டின்
இதய வெள்ளமெல்லாம்
உறுதி பூத்து நிற்கும்
உள்ளம் தான் அதுவென்று
உணர்வு கொள்வார்!
இது வரை என் விடியல் கவிதைக்கு
கிடைக்காத கருப்பொரூளும்
புரியாத உரிப்பொருளும்
இன்று கிடைத்ததென
அள்ளிக்கொண்டான்
உன் கவிதையை
அந்த ஒளிக்கதிரோன்!
பூரிக்கும்
தமிழ் நாடு!
புறந்தள்ளும்
தடை யாவும்.
புறப்படுமே
அறிவின் நம்
அயராத தமிழ் வீரம்!
ஸ்டாலின் என்றால்
அந்த பெயரின் சிவப்பே
நமக்கோர் தமிழின் செம்மொழி!
அந்தப் பெயரை
தமிழ்ப்பெயராக்கு என
தம் மூளையை கழற்றி வைத்து
மூக்கால் அரற்றிய கூட்டமே
மூக்குடந்தது போதுமா?
மத வெறிகள் மட்டுமே
ஓட்டு வாங்கப்பொதுமே என
உன் காட்டு ஒலி
இரைச்சல் எல்லாம் இனி
குப்பை குப்பை குப்பை தான்.
தமிழ் வாழ்க!
வீழாத எங்கள் தமிழ்
என்றும் வாழ்க!
____________________________________________
சொற்கீரன்.
(08.04.2025 அன்று
"திருவிழாக்காலம்"
என்ற தலைப்பில் எழுதிய
ஈரோடு தமிழன்பன்
அவர்களின் கவிதைக்கு
பொங்கிப்பெருகிய
கவிதை இது)
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக