புதன், 30 ஏப்ரல், 2025

தொலைநோக்கிப் பூதங்கள்

 

  தொலைநோக்கிப் பூதங்கள்

_______________________________________


ஜேமஸ் வெப் எனும் 

மனிதனின் அறிவியல் பூதம்

செயற்கை மூளையின் உள்ளே

பின்னல் நெசவு செய்து தரும்

"குவாண்டத்தின் பாலம்"

மிக மிக வியப்புக்குரியது.

அண்டப்பரிமாணங்கள்

நமது இருப்பு அண்டத்திலேயே

சவ்வுப்படலங்களாய்

இழைந்திருப்பதாய் அது

சொல்கிறது.

பில்லியன்கள் ஒளியாண்டுகளையும்

ஊடுருவும்

குவாண்டத்தின் என்டேங்கில்மென்ட்

எனும் "தொடர்பு ஊட்டம்"

நமக்கு திகில் நிறைந்த காட்சிகளை

தருகிறது.

பகா எண்கள் எனும் 

"நிகழ்வு பரிமாணங்களை"க்கொண்டு தான்

இந்த அண்டக்கூடுகள்

முடையப்படுவதாக‌

இந்த தொலைநோக்கி காட்டும்

பூதங்கள்

உண்மையிலேயே

நம் "மனிதம்" தன்

அறிவின் தூரிகையால்

ஆயிரம் ஆயிரம் ஓவியங்களை

தீட்டுகின்றன.


____________________________________________

சொற்கீரன்




Google’s Quantum AI Unlocked James Webb Data… and What It Found Is a Nightmare


NASA Catches Strange Transmission From Deep Space | Watch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக