சமுதாய "ஹில்பர்ட் வெளி"
________________________________
முடிவிலி
மிக மிக அருமையாக
இன்ஃபினிடியை
இது பெயர்த்து தந்திருக்கிறது.
கணினிகள்
எந்த முட்டுச்சந்தையும்
தகர்த்துக்கொள்ளும்.
கணினி என்றாலும்
முடிவிலி என்றாலும்
ஏறக்குறைய் ஒன்று தான்.
இந்த "ஏறக்குறை" என்பது தான்
முடிவிலி தனக்குத்தானே
சூட்டிக்கொள்ளும் மகுடம்.
வடமொழியில்
சரம் என்று அசைவுள்ள என்றும்
அசரம் என்றால் அசைவற்ற என்றும்
பொருள்.
உயிருள்ள உயிரற்ற
அல்லது
டைனாமிக் ஸ்டேடிக்
என்ற இரு எதிர் முனைகளையும்
முடிச்சுப்போட்டு
"முழுமையாக்குகிறது"
சராசரி என்ற சொல்
நம்மிடையே வைத்து
தைக்கப்பட்டு விட்டது.
அதைத்தான்
கடவுள் என்ற
முழுமைப்பொருளுக்குள்
பூட்டி வைத்துக்கொண்டு
உடுக்கை
அடித்துக்கொணடிருக்கிறார்கள
கடவுள் கோடாங்கிகள்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல்
பொய் + மெய்
அல்லது
ஆத்திகம் +நாத்திகம்
அல்லது
முடிவுளி அல்லது முடிவிலி
அல்லது
சீரோ அல்லது இன்ஃபினிடி
என்று மாறி மாறி
கணித உடுக்கைகளை
அடித்துக்கொண்டே இருப்பது தான்
"அறிவின் அதிர்வுகள்' ஆகும்.
இந்த கணித ஆர்ப்பாட்டத்தில்
ஒரு அதிர்ச்சி வைத்தியம்
செய்தவரே
"டேவிட் ஹில்பர்ட்" என்பவர்.
அந்த சலனப்படத்தை
டக்கென்று
ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாய்
ஒரு புள்ளியில்
அதை சுருங்க அல்லது நெருங்க
வைத்தார்.
அதன் கணித மொழி
"கோசி கன்வெர்ஜன்ட் சீக்குவன்ஸ்"
என்பதே அது.
சரி..
இதற்குள்
உங்கள் முடிவிலி மாயத்தை
ஆட்ட பாட்டம் செய்து கொள்ளுங்கள்.
இதைத்தான்
மார்க்ஸ் தன் "சமுதாய இயக்கவியலின்"
அச்சு மையம் ஆக்கினார்.
"மாற்றம் ஒன்றே மாறாதது".
முடிவிலி என்பதும்
ஒரு முழுமை தான்.
ஆம்
இன்ஃபினிடியும் ஒரு கான்ஸ்டன்ட் தான்.
நம் அறிவியலின்
நுனிக்கொம்பரான
குவாண்டம் சிப்
இப்படி பில்லியன் பில்லியன் தட்வைகள்
உடுக்கடித்து
"அப்ராக்ஸிமேஷன்" என்று
ஒரு மைல்கல் நட்டி
மூச்சு வாங்கிக்கொண்டது.
அடிப்பவன்
அடிபடுபவன்
முரண்பவன்
மறுப்பவன்
இணைபவன்
என்று ஒரு கைகோர்ப்பில்
மனிதம் எனும்
மகத்தான
"தோழமைப்புன்னகை"
பூத்தால் சரி தானே.
ஆனல் இடைகழியில்
இத்தனை ரத்தக்கடல்கள் எதற்கு?
இருப்பினும் இந்த
"சமுதாய உடுக்கை அடிப்புகளில்"
அப்படி ஒரு
ஹில்பர்ட் வெளி
தோன்ற முடியுமா?
அது தான்
இப்போதைய
மில்லியன் பில்லியன் ட்ரில்லியன்
இன்னும் குவார்டல்லியன் குய்ண்டில்லியன்..
போதும் போதும்..
அந்த "ஸ்ஸில்லியன்"டாலர் கொஸ்டின் தான்
விடைக்காக
காத்துக்கொண்டிருக்கின்றன.
தீஸிஸ்
ஆண்டி தீசிஸ்
சிந்தீஸிஸ்
...
என்ன இது ஒரு
"அப்ரகடப்ரா"வாக இருக்கிறது
என்று பார்க்கிறீர்களா?
இதுவே "மனிதம்"
உள்வாங்கி வைத்திருக்கும்
சம நீதி அதிர்வுகளின்
சமுதாய "ஹில்பர்ட் வெளி"
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக