எண்களில் "பகா எண்கள்" எனும் ப்ரைம் நம்பர்களே கணிப்பொறிக்குள் கூடு கட்டிக்கொண்டு இந்த அறிவு உலகத்தின் "பகாசுரன்"களாய் வலம் வருகின்றனர்.இயற்பியலில் விஞ்ஞானிகளுக்கே பிடித்த "தியரிகளாய்" இருப்பது "க்ராண்ட் யுனிஃபிகேஷன் தியரி" தான்.(ஜி யு டி) இதை சிம்மெட்ரி சூபர்சிம்மெட்ரி இன்வேரியன்ஸ் என்றெல்லம் அழைப்பார்கள்.அதாவது பிரபஞ்ச இயலில் மேட்டர் எனெர்ஜி என்றெல்லாம் சமன்பாடுகள் தேவையில்லாமல் எலக்ரான் என்று அழைப்பது போல் இந்த "காஸ்மிக்"கூறுபாடுகளை பொதுவாக "காஸ்மோட்ரான்" அல்லது "காஸ்மிட்ரான்"என்று அழைக்கும்படி அந்த இயற்பியல் நுட்பங்களின் உண்மைகளை ஆய்ந்து "தேற்றம்" (தியரம்) செய்தால் என்ன? என்ற ஒரு "க்ரேஸி திங்" தான் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டுஇருக்கிறது.அதே போல் கணித இயலில் ஜி யு டி என்பது தான் இந்த நுணுக்க கணிதம்(அப்ஸ்ட்ராக்ட் அல்ஜிப்ரா) இதில் செட் தியரி குரூப் தியரி ரிங் மாடுல் கம்யூட்டேடிவ் அல்ஜிப்ரா டோபாலஜி என்று கிளைகள்பல்கி பெருகி ஓடுகிறது.இதில் "ப்ரைம் நம்பர்ஸ்" என்பதே ஒரு விளக்கமுடியாத விலக்க முடியாத புதிர் ஆக இருக்கிறது. சைக்ளிக் குரூப்ஸ் நார்மல் குரூப்ஸ் என்றும் ஆகிவிட்டன. பெர்முயூட்டேஷன் காம்பினேஷன எனும் "காம்பினேடோரியல் அல்ஜிப்ரா" தான் கம்ப்யூடருக்குள் உட்கார்ந்துகொண்டு துணைக்கு இந்த ப்ரை நம்பர்ஸ் உடன் பிணைந்து கொண்டு "குவாண்டம்" கம்ப்யூட்டராய் பரிணமித்து ஒரு குட்டிப்பிரபஞ்சமாய் விஞ்ஞாமியின் மடியில் அமர்ந்திருக்கிறது. அதன் நொறுக்குத்தீனியே "ஏ ஐ" எனும் செயற்கை மூளை சித்து விளையாட்டுகள்.
சரி. இப்போது ...சீவ்ஸ் எனும் ப்ரைம் நம்பர்களை வடிகட்டும் நுட்பத்தை வைத்துக்கொண்டு இந்த வானத்தை அல்ல இந்த பிரபஞ்சத்தையே ஒரு பூனைக்குட்டியாய் ஆக்கி விளையாடுகிறார்கள் விஞ்ஞானிகள்.ஏற்கனவே குவாண்டம் எனும் அந்த வினோத பிராணியை "உயிரோடும் உயிரில்லாமலும்" இருக்கும் பூனைக்குட்டியாகஉருவகித்து "ஸ்ரோடிங்கர் கேட்" என்று விளையாட கொடுத்து விட்டுப்போய்விட்டார் "எர்வின் ஸ்ரோடிங்கர்".இன்னும் இந்த ஆழ்ந்த கணிதத்தின் ஆழிக்குள் முக்குளி போடலாம் வாருங்கள்
..........இ பி எஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக