"நமக்கும் கீழே
உள்ளவர் கோடி"
அப்பாடா!
கவிஞர் சரியாகத்தான்
சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் விதி..
விதியை யாரால்
வெல்ல முடியும்?
சரி..
சாப்பிடலாம்.
"ஒரு பட்டர் மசாலா ஸ்பெஷல்"
ஆர்டர் சொல்லிவிட்டு
அந்த
"மயக்கமா?கலக்கமா?" பாட்டுக்கு
டேபிளில் தாளம்
போட்டுக்கொண்டிருந்தேன்.
ஆனால்
புள்ளிவிவரம் சொல்கிறது.
நமக்கும் கீழே
"அந்த உள்ளவர் கோடி"
கிட்டத்தட்ட
700 கோடி மக்களில்
எண்பது சதவீதம் என்று.
நமக்கு
இன்னும் "பெருமாள்களும் சிவன்களும்"
மற்றும் வானத்து வசனங்கள்
சொல்லிய தேவன்கள் தான்
படியளக்கிறர்ர்கள் என்று
மரத்து
மரித்துக்
கிடக்கின்றோம்.
மனிதம் என்று உயிர் பெறும்?
___________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக