ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

வாழ்க தமிழ்!

 வாழ்க தமிழ்!

________________________________

"அகர முதல" என்று
மனித ஒளியின்
உயிரெழுத்தை
உயிர்த்துக்காட்டியவன்..
ஒலித்துக்காட்டியன்..
தமிழன்!
வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி...
அது மனிதமா? இறைவமா?
"காமம் செப்பாது கண்டது மொழிமோ"
இதன் குரலில்
ஒரு சிந்தனை
தராசு பிடித்துக்கொண்டிருக்கிறது.
தேவனும் சைத்தானும்
இரு தட்டுகளில் தான்
நின்று கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான்
கல் பொருது இற‌ங்கும் அந்த
மல்லல் பேர் ஆறு
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்று
முழக்கம் இட்டது.
மனிதன் கடவுள் பெயரால்
தூளாகுவதும்
சைத்தான் உருவில் மனிதனை
கடவுளாய் மிரட்டுவதும்
நிகழ்கின்றவைகளாக‌
இருக்கின்றன.
ஆயிரம் ஆண்டுகள் எல்லாம்
உருண்டு உருண்டு
ஓடிய கூழாங்கற்களே.
ஓ! தமிழா!
திரை எனும் கடல் அலைகளை
உன் செங்கோன்மையால்
திரைவியம் எனூம் செல்வம்
ஆக்கினாய்.
அதனால்
ஏதோ அந்த ஒரு குட்டித்தீவில் கூட‌
அதன் உரிப்பொருள் கருப்பொருள் கூட‌
உன் "தொல் காப்பியம்" தான்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன்"
என்றாயே!
உன்னிடமா அந்த‌
அந்த "நாலு வர்ணப்பொம்மலாட்டம்?"
பிறிதின் நோய் கூட‌
தன் நோய் போல் அணுகுவதே
அறிவு என்று
தேவனுக்கெல்லாம் மருத்துவம்
செய்கின்ற‌
தேவ வசனம் அல்லவா
உன் ஒலிகள்!
ஓங்கி உயர்ந்த தமிழே
உன் குரலே இங்கு என்றும்
மறையா மறை!
வாழ்க தமிழ்!
_______________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக