பெட்டகம்.
_________________________________________________________
நினைவுகளே
உணவுகள்.
அந்த
அம்பதுகளும்
அறுபதுகளும்
வாழ்க்கை இலையில்
இன்னும்
ஆவி பறக்க
சுவை கூட்டுகின்றன.
கனவுகளின்
கலைடோஸ் கோப்பில்
வண்ணத்திருப்பு முனைகளே
அந்த "வயது"கள்.
அதற்குப் பின்னும்
அந்த மாணிக்கத் தருணங்களின்
குடும்பச் சித்திரம்
பாசமும் நேசமுமாய்
நீளமாய்
ஒரு மின்னல் கயிற்றை
கயிற்று இழுப்புப்போட்டியாய்
மகிழ்ச்சி கொப்பளிக்க
விளையாடிய வாழ்க்கை
எனும்
பட்டறிவுகளின்
பெட்டகத்தை
திறந்து திறந்து மூடுவதே
இன்னுமொரு வாழ்க்கை இங்கு!
உள்ளத்துள்ளே
அந்த நயாகராவின் அருவி கொட்டல்கள்
மத்தளம் கொட்டிக்கொண்டே
இருக்கின்றன.
--------------------------------
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக