நிழல்கள்
_____________________________________
இங்கே
கண்ணாடி உடைந்து
நொறுங்கிக்கொண்டிருக்கிறது.
நம் பிம்ப மிச்சங்களை
கணக்கு
பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆயிரம் வரலாற்றுத்துண்டுகளில்
எல்லாம்
சொட்டிக்கொண்டிருந்த ரத்தம்
இன்னும் காயக்கூட இல்லை.
வரலாறாவது ?ஒண்ணாவது ?
நினைவுகள் கூட
வெறுமை தான்.
ஆம்
இது சிந்தனைகளின் வறுமை.
போகட்டும்
நிழல்களைத்தான்
இருட்டுகளைத்தான்
அடித்து
நொறுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் வலிகளைப் பற்றவைக்கும்
தீக்குச்சிகள் கூட
இங்கே வலிகள் தான்.
அவற்றையும் பற்ற வைக்கும்
நெருப்பின் வலிகளையா
நீ தேடுகிறாய்?
_________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக