நண்பர் திரு சேகர் கிருஷ்ணசாமிக்கு
அன்பு வாழ்த்துக்கள்
_____________________________________
சொற்கீரன்.
மின் தளம் என்பது
"பூலியன் அல்ஜிப்ராக்களின்"
மத்தள்ம் தான்.
அதை நட்பின்
இதயத்துடிப்புகள் ஆக்கி
எப்போதும்
இன்னிசை ஆக்கிய
மனித நேய நண்பரே!
குற்றாலக்குறவஞ்சியை
நான் இன்னும் முடிக்கவில்லை
என்று அந்த
"திரிகூட ராசப்ப"க்கவிராயர்
"காமிரா"வை
இவர் கையில் கொடுத்துவிட்டுப்
போய்விட்டாரோ!
அந்த அருவித்தமிழின்
சாரலும் தூரலுமாய்
உங்களிடமிருந்து
எத்தனைப் பதிவுகள்?
பம்பொளி என்று
கொச்சை நாற்றம்
மணக்க மணக்க
அந்த "குறிஞ்சியும்"
குளிர் பூங்காற்றும்
உங்கள் மூலம்
பற்பல "யுகங்களாய்"
எங்களுக்கு உங்களின்
களிப்பருளும் சொற்கள் வருட
இனி வரும் வருடங்கள் எல்லாம்
துயரங்களின் கனம் இழந்த
வெறும் தூசு தான்.
உங்களுக்கு....
எங்கள் மனிங்கனித்த
பிறந்த நாள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக