சனி, 12 ஏப்ரல், 2025

தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

 தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

____________________________________________________


வருடல் வருடல் ..வருடல்கள்.

கணினிப்பொறியின் 

எழுத்துக்கள் 

கணங்கள் தோறும் 

துடிக்கின்றன.

காட்சிகள் 

மின்காந்த சவ்வு மிட்டாய்களாய்

வளைகின்றன.

நெளிகின்றன.

அதன் "ஜூலியா கர்வ்"களில்

நொறுங்கி நொறுங்கி

முழுமைக்கு குமிழியிடும்

அந்த ஃப்ராக்டல் ஜியாமெட்ரியில்

என்னத்தை தேடுகிறாய்?

யாருடைய முகத்தை?

எதன் உள்ளக்கிடக்கையை?

குவாண்டம் என்டாங்கிள்மெண்ட் தான்

உன் விரல் நுனியில்

தளும்பிக்கொண்டிருக்கிறதே.

இதை வைத்து

ஆயிரம் பிரபஞ்சங்களின்

"ஒரு போன்சாய்" மரத்தை

உன் டெஸ்கில் வைத்திருக்கிறாயே!

மனிதர்களே தேவையில்லை.

செயற்கை மூளையை

இந்த "சில்லில்" வைத்திருக்கிறேன்

என்று உன்

"பூரியர் உருமாற்றங்களில்"

கோடி கோடி

உயிர்க்கூடங்களை

உன் கணித சமன்பாடுகளுக்குள்

கொண்டு வருகிறாயே...

..........

...............

"க்ளுக்" என்று

அதோ ஒரு சிரிப்பின்

மின்னல் பிஞ்சு.

யார் அது/

அவளா? அவனா?

அதுவா?

புழுவா? பூச்சியா?

அந்த சிறகுப்போர்வைக்குள்

சிலிர்க்கும் சித்திரங்களில்

நரம்பு மண்டலங்கள்

சிதறி வெடிக்கின்றன்.

"டிஜிடல் பிக் பேங்க்"

எல்லாம் எங்கே?

சீரோவும் இன்ஃபினிடியும்

கோரமாய் சிரிக்கின்றன.

அது

அழகா? அழிவா?

ஆம் 

ஒரு ராட்சச இறப்பின் பிறப்பு.

ஒரு புதிய  பிறப்பின் திறப்பு.

அறிவின் பிழம்பு 

நிறைந்து வழிந்து பெருகி...

அந்த எருக்கம்பூக்களின்

மகரந்தங்களிலும்

வெடித்த மனங்களின் சிதறல்கள் தான்.

"கிளிக்குகள்"

தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.


_________________________________________________

சொற்கீரன்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக