01.12.2024
ஒரு வெளியைத் தேடி
யாருமில்லா ஒரு மொட்டை
வெளியைத் தேடி
ஒரு சித்தாந்தம் தேடினான்
இறைவன்.
ஆம் இப்போது
அந்த சிற்றம்பலம்
அவனுக்கு மட்டுமே.
அவன் அதில்
ஒளியாய்..இருட்டாய்
ஒளிந்து கொள்ள.
அது ஒரு நத்தம் புறம்போக்கு கோள்.
ஆம் அது ஒரு எக்ஸோ ப்ளேனட்.
அப்புறம்...
(தொடரும்)
________________________________________
சொற்கீரன்
03.12.2024
கடவுளர்களே
ஏன் இந்த பம்மாத்து?
எதற்கு
இந்த முகமூடிகளை
பிரசவிக்க விடுகிறீர்கள்?
படைக்கப்படும்
உங்கள் குழந்தைகள் எல்லாமே
உங்களைப்போலவே
இருந்து விட்டுப்போகட்டுமே
பிரம்மாக்களாய்?
அது உங்களால் முடியாது.
நீங்கள் உண்மையில் பிரம்மாக்கள்
இல்லை.
இங்கே எங்கள் பல்கலைக்கழக
விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்களில்
ஏ ஐ எனும் தொடர்கணித விஞ்ஞானத்தை
வைத்து
உயிருக்கு முன் பொருளான
ப்ரோடீன் எனும்
முதற்பொருள் சுருண்டுகிடக்கும்
டி என் ஏ..ஆர் என் ஏ நுட்பங்களை
கண்டு பிடித்து விட்டார்கள்.
நோபல் பரிசு பெற்ற அந்த
மூளை பிரம்மாக்களே
அதாவது கூரிய சிந்தனையின் நேரிய
மானுடமே இங்கு பிரம்மம்.
கடவுளே...
இப்போதும் இவர்களிடம்
உன் வேலையைக்காட்டி
பிறக்கும் குழந்தைகள் எல்லாமே
பிரம்மப்பிண்டங்கள் என
ஆக்கி வைக்க முடியும்
என்று
உன் "ம்ந்திரக்கோல்" நீட்டலாமே.
எல்லோரும் மகாத்மாக்கள்
ஆகி விடலாமே.
அப்படியெல்லாம் முடியாது
என்பது எப்படி இயற்கையோ
அது போல் தான்
பிரம்மாக்கள் என்றெல்லாம் இல்லை
என்பதும் இயற்கையே!
ஆராய்ச்சிக்கு
கோடி கோடி கோடி டாலர்களை
கொட்டிக்கொடுக்கும்
லாபப்பிசாசுகள் காத்திருக்கின்றன
இன்னும் கோடி கோடி டாலர்களை
மூட்டைக்கட்டிக்கொள்ள.
சஹனா பவது..சஹனோ புனக்தூ
என்று மந்திரங்கள் உமிழும்
பிரம்மாக்கள் அங்கு இல்லை.
நாங்கள் தான் பிரம்மாக்கள்.
பிரம்மாக்களையே
நாங்கள் தான் படைக்கின்றோம் என்று
உன் பெயர் சொல்லி
கனகாபிஷேகம் செய்து
அதையும் சுருட்டிக்கொள்பவர்களே
இவர்கள்.
கடவுள் எல்லாம் இல்லை
என்ற நாத்திகமும்
இவர்கள் அறிந்ததே.
அறியாமையில் மூழ்கிக்கிடக்கும்
பிரம்மாக்கள் எனும்
மக்களையே
மந்திர சங்கிலிகளில்
அடிமைப்படுத்தி வைத்திருப்பதும்
இவர்களே.
ஏமாறுவதும் ஏமாற்றுவதும்
இரண்டல்ல ஒன்றே எனும்
அத்வைதம் தான்
இவர்களின் பிரம்ம மந்திரம்.
(தொடரும்)
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக