பனையூர் ஆற்றுப்படை.
____________________________________
சொற்கீரன்
வாங்கங்ணா! வாங்கங்ணா! வாங்க!
சூடான பஜ்ஜி சொஜ்ஜி
ஜோராகவே கிடைக்கும்ங்க..
வாங்கங்ணா வாங்க!
மயிலுச்செறகெடுத்து
குயிலுக்குரலெடுத்து
காக்காவின் கண்ணெடுத்து
கனமான கூட்டணியாய்
சேத்துத்தச்ச சட்டையிது.
சட்டை செய்ய வேண்டாம்.
கட் அவுட்டு இங்கே
எல்லாருக்கும் உண்டு.
ரெட்டையானை சல்யூட்டும்
இங்கே தான் உண்டு.
அம்மாமாரே அய்யாமாரே
தம்பிமாரே தங்கச்சி மாரே
என்னங்கங்ணா
அண்ணாமாருக்கும் சேத்துத்தச்ச
சட்டையிது.
ரெட்டையிலை மாதிரிதான்
ரெட்டையானையும்.
வெண்தாடி வேந்தரின்
கைத்தடியும் இங்க உண்டு
காமராஜரும் இங்க
பாக்குராறு தெரியுதா?
வித்து வித்து தீந்துபோகும்
பட்டாணி சுண்டல்...
வேர்க்கடல வேர்க்க வேர்க்க
கெடைக்குமுங்க வாங்க
வாங்க!வாங்க!இங்கே
வந்து துண்ணுப்பாத்துப்போங்க!
என்ன இசமோ?என்ன கிசமோ?
யாருக்கு இங்க தெரியும்.
சும்மா ரைமிங்கா
இருக்கட்டும்ணு
பஞ்ச் டைலாக் சொன்னேன்.
பாசிசமாவது..பாயாசமாவது..?
கேட்டதோட மறந்துடுங்க..
சும்மா சும்மா சொல்லிப்பாத்து
சொரிஞ்சு விட்டுக்கோங்க!.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக