செவ்வாய், 24 டிசம்பர், 2024

"இறை"

 

இறந்த இதயத்துடிப்புகள்
(ஈரோடு தமிழன்பன் கவிதை. 24.12.24)
_______________________________________________
சரி தான்.
ஒன்றின் "இரை"
இன்னொன்றின் "இறப்பில்"
தான் இருக்கிறது.
இதுவே"இறை"என்று
வைக்கப்படும்.
ஆதி அந்தமில்லா
பரம்பொருளை இவர்கள்
கையெடுத்துக்கும்பிட
"அந்தாதி"ப்பாடல்களே
கைக்கு கிடைக்கிறது.
முதல்...முடிவு
என்று
முடிவெடுத்துக்கொண்டு
இந்த விண்வெளியின் கண்வெளிக்குள்
காட்சிகள்
அடைபட்டதில்லை.
இறந்த பின்னும்
தன் நிழல் தேடி
தன் சுவடு தேடி
காக்கை உருவத்தில்
தான் வந்து
தன் வீட்டு அடுப்பங்கரையில்
ஒரு தேங்காய் சிரட்டையை
கவ்விக்கொண்டு போக‌
தனக்கு உரிமையிருக்கிறது
என்ற எண்ணத்தை
இப்போதே
அடிவயிற்றில் கட்டிக்கொள்வதே
ஆன்மீகம்.
கோடிக்கணக்கான காக்கைகளும்
கோடிக்கணக்கான மனிதர்களும்
ஏதோ ஒரு நாள்
புலம்பெயர்ந்து வாழ்வோம்
அல்லது வாழுகிறோம்
என்ற அந்த ஆன்மீகம்
ராமேஸ்வரம் கடற்கரையிலும்
கங்கை கும்பமேளாக்களிலும்
தர்ப்பைப்புல் எள்ளுப்பிண்டம் சகிதம்
அரங்கேற்றிக்கொண்டே இருக்க்கிறது.
ஏ ஐ ..ஏ ஐ என்று
இந்த பிரபஞ்சத்துக்கே
களுத்துச் சுளுக்கு
எடுத்துக்கொண்டிருக்கும்
மூளைப்பெட்டகங்களே
இந்த காக்கைகளின்
அந்த "ஒண்ணரைக் கண்" "திருஷ்டியில்
தெரியும் அந்த‌
நியூரல் நெட்வொர்க்கை
வருடிப்பாருங்களேன்.
உங்கள் குவாண்டம் தான்
ட்ரில்லியன் டிரில்லியன் கணக்கில்
தரவுகளை கூறு போட்டு
கொடுத்துவிடுமாமே!..
கொஞ்சமாவது "கூறோடு" பேசுங்க‌
அங்கிள்
என்று ஹாய் சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
"போனால் போகட்டும் போடா"
இருக்கவே இருக்கிறது
மந்திரங்களும்
மணியாட்டல்களும்
கற்பூரவாசனைகளும்.
கழுதைகளுக்கு தெரியுமா
அந்த கற்பூரவாசனை?
அந்த ஆலமரத்துப்பிள்ளையாரிடம்
போவோம் வாருங்கள்.
_______________________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக