சனி, 28 டிசம்பர், 2024

இசை முரசு ஹனீஃபா

 இசை முரசு ஹனீஃபா 

_______________________________


மெய்சிலிர்க்க வைக்கும்

குரல் வளம்.

இவர் மறைந்தும் மறையாமல்

எதிரொலித்துக்கொண்டே

இருக்கிறார்.

"கல்லக்குடி கொண்ட..."

பாட்டு 

கலைஞரை கண்முன் 

காட்டிக்கொண்டே இருக்கிறது.

"இறைவனிடம் கை ஏந்தினேன்..."

எங்கோ

இந்த பிக் பேங்குகளுக்கு அப்பாலும்

யாரோ ஒருவர்

மானிட நேயத்தின்

பிரபஞ்சவெள்ளமாய்

கை அசைத்து நிற்பதாய்

ஒலிக்கிறது.

மனிதனுக்கு மனிதன்

அன்பை 

கை ஏந்தி

கை அசைத்து

அடையாளம் காட்டுவதாய்

"இசை முரசு" கொட்டுகிறது.

என்றும் இசைப்பார் அவர் நம்

இதய நாளங்களில்.

அவர்

என்றென்றும் வாழ்க!


_________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக