என்ன சொல்லப்போறீங்க மக்களே?
___________________________________________________
பூஜ்யத்துக்குள்ளே
ஒரு ராஜ்யம்..
இல்லாவிட்டால்
ராஜ்யமே ஒரு பூஜ்யம்.
அந்தக்கவிஞன்
எழுதிவிட்டுப்போனான்.
நம் நடப்புகளை
நாம் எப்படி என்று சொல்வது?
500க்கும் மேல்
உறுப்பினர்கள்.
சமயங்களில்
எதுவுமே செய்யமுடியாத
எதையுமே மாற்ற முடியாத
கண்டிப்பாக ஏதாவது ஒன்றை
செய்து தான் ஆக வேண்டும்
என்ற நிலையிலும்
ஒன்றையுமே செய்ய
அல்லது பேசக்கூட
முடியாத நிலை தான்
ராஜ்யத்துக்குள்ளே ஒரு பூஜ்யம்.
இருந்தாலும்
எல்லாமே இதோ எழுதப்பட்டிருக்கிறது.
மக்கள் நலம் என்பதை
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
என்று
சொல்லிக்கொண்டு
மக்களை இல்லாமல் செய்வது
அல்லது
எல்லாவற்றையும் அழித்து விட்டு
பாருங்கள் இங்கே
கடவுள் சிரிக்கிறார்
என்று
நாம் சொல்லிக்கொண்டே இருப்பது
கடவுளா
அது யார்?
அது எதற்கு இங்கே?
என்று திடீரென்று அறிவு
கொளுத்திக்கொண்டு
திசைகளை
தீர்மானிக்க அல்லாடுவது...
இதெல்லாம் தான்
பூஜ்யத்துக்குள்ளே ராஜ்யம்
அல்லது
ராஜ்யத்துக்குள்ளே பூஜ்யம்.
எதையோ
சொல்லிவிட்டுப்போங்கள்.
ஜனநாயத்துள் ஒரு சர்வாதிகாரம்
அல்லது
சர்வாதிகாரமே ஒரு ஜனநாயகம்...
என்ன சொல்லப்போறீங்க மக்களே?
சிந்தியுங்கள்...போதும்!
___________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக