செவ்வாய், 17 டிசம்பர், 2024

சொட்டு சொட்டாக முற்றுப்புள்ளிகள்

 

சொட்டு சொட்டாக முற்றுப்புள்ளிகள்

_________________________________________________


ஒரு முற்றுப்புள்ளி

உரைக்க வந்தது என்ன?

என்று

17 12 24 காலை 07 மணிக்கு

எழுதிய ஈரோடு தமிழன்பனின் கவிதை

எனும்  அந்த  "முத்துப்புள்ளிகளை"ப்பற்றிய‌

கவிதை இது

___________________________________________


முற்றுப்பெறாத‌

வரலாற்றுச் சிதிலங்களுக்கு

சலங்கை கட்டி

அரங்கேற்றியிருக்கிறார்

அருஞ்சுவை சொல்லெடுத்து

அருவி கொட்டும் 

நம் அரும்பெரும் கவிஞர்

ஈரோடு தமிழ‌ன்பன்!


கடவுள்கள் என்றால்

மனித சிந்தனையின் 

வெள்ளைப்படுகையில்

கருப்பு எச்சங்களை

முற்றுப்புள்ளிகளாய்

வந்து நெருக்கிக்கொள்ள‌

இடங்கொடாத‌

முற்றிய அறிவின் ஒளித்துளியை

தெறித்து வைப்போமா?


மணிப்பூர் புண்களை

தினம் தினம் ஓட்டுகளாய்

எண்ணி  எண்ணி

மகுட‌ம் தூக்கித்திரியும்

ஆணவத்துக்கு

ஆணியடிக்கும் முற்றுப்புள்ளிகளை

தூவி விடுவோமா?


எண்ணிக்கையில் ஒன்றிரண்டு

மூட்டைகளுக்கு மட்டும்

இந்திய வளங்களை

சுருட்டிக்கொடுத்து

சுடுட்டு புகைக்கும்

வேதாளங்களின்

வேதங்களுக்குள்

எரிமலை லாவாவை

உருட்டித்திரட்டி

முற்றுப்புள்ளியாக்கி

உருட்டி விடுவோமா?


சமூகநீதி சாதிப்பட்டியல்களை

கொழுத்த சமூகப்புள்ளிகள்

கரையான்களாய் 

அரித்துக்கொண்டிருப்பதற்கு

ஒரு அரக்குமாளிகைக்கட்டி

அக்கினியில் முற்றுப்புள்ளி

இட்டிடலாமா?

விரலைக்காட்டுங்கள்.

ஒரே தேர்தல்

அதுவே கடைசி தேர்தல்

என்று முற்றுப்புள்ளி வைக்கும்

சாணக்கிய சூழ்ச்சிகளுக்கு

சாவு மணியடிக்கும்

மரணப்புள்ளி ஒன்றை

முற்றுபுள்ளி 

ஆக்கிடலாமா?


___________________________________

சொற்கீரன்





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக