வயதுகள்...
___________________________________
உங்களைச்சுற்றிக்கொண்டு
ஆனால்
உங்களை கடித்தாற்போல்
நடித்துக்கொண்டு
இருக்கும்
ஒரு அனக்கொண்டா அது.
உங்களின்
பழைய கனவுகளும் நனவுகளும்
தான் அதன் தீனி.
நீங்களும் அதைத்தான்
தினம் தினம்
கொறித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
கட கடத்துப்போன
உங்கள் நினைவு எந்திரங்களுக்கு
எண்ணெய் போடுவதும் கூட
உங்கள் பழைய புத்தகங்களும்
அவற்றின் வரிகளும் தான்.
கண்கண்ட
வரலாற்று ஏடுகளாய்
நீக்கள் படிப்பாரற்றுக்கிடக்கும் போது
அந்த நூலகங்களுக்கு
மீண்டும்
படிப்பதற்கு
ஆய்ள் சந்தாதார்களாய் ஆக
நீங்கள் அலை மோதிக்கொள்ளுகிறீர்கள்.
பக்கங்கள்
புரட்டப்பட்டுக்கொண்டிருக்கட்டும்.
புத்தகங்கள் மூடப்படும்போது
அதன் இடுக்குகளில்
நசுங்கி
அதன் பக்கங்களிலேயே
ஃபாசில்களாக அப்பிக்கிடக்கும்
அடையாளங்கள்
உங்கள் தொல்லியல் அடையாளங்கள்.
வாருங்கள்
வரலாறு படைப்போம்.
அல்ல அல்ல..
ந்ம் வரலாறுகளைப்
படிப்போம்.
______________________________________________________
சொற்கீரன்
(வயது 82)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக