அந்த மின்மினிக்குள்
சிலிர்க்கும் வரிகள்
எத்தனை எத்தனை
அண்டவெளிகளை
அடைகாத்து
நம்மிடும் சிமிட்டுகின்றனவோ?
உங்கள் பேனாவுக்கும்
தெரியாது.
"சுட்ட சட்டி சட்டுவம்
கறி சுவை அறியுமோ?"
அதைச்சுட சுட
உயிர்க்க வைக்கும்
நம் தமிழே அறியும்.
உங்கள் தமிழே
அப்படி சமைக்கும்!
சமைந்தே போனது
சாலையில் கிடக்கும்
ஒரு ஜல்லி
உங்கள் சொல் கண்டு.
அது அப்போது தான்
சுவைக்கிறது.
அதன் கற்கண்டு அது.
_____________________________________
சொற்கீரன்
(அகல்விளக்கு மற்றும் மின்மினி பற்றிய ஈரோடு தமிழன்பன் கவிதை
பற்றிய கவிதை இது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக