கலந்துரையாடல்கள்.
விளக்கங்கள்.
சொற்பொழிவுகள்.
துண்டுப்பட காட்சிகள்.
எத்தனை? எத்தனை?
எல்லாம் எடுத்துச்சொல்லியும்
மனிதனை
ரத்தச்சேற்றில் தள்ளுவது
மதம் தானே.
புளுகு புராணங்கள் தானே.
சாதிப்பிளவுகளில்
சங்கறுந்து
குரல் இறந்து கிடப்பது
மானிடம் தானே....
அத்வைதம் சொல்கிறது
மானிடன் என்றால் என்ன?
இறைவன் என்றால் என்ன?
அப்போது
ரத்தவிளாறுகளிலா இறைவன்?
"அய்யோ அய்யோ
என் மனத்தை புண்படுத்தி விட்டீர்களே."
நன்றாக
உன் கைகளைப்பார்
ரத்தம் சொட்டும் அரிவாள்
உன் கையில்!
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக