நாம் நம்மோடு கொஞ்சம்
மூடத்தனமாய் விளையாடுவதற்கு
கொடுக்கப்பட்டவையே
கடவுள்கள்.
ஏன் மூடத்தனம் என்கிறோம்?
நம் புலன்களுக்குள் உணர்வு படாமல்
அவை ஒரு வித "மூடாக்கு"
அணிந்திருப்பதால் தான்.
கண்களை மூடி ஒரு
சாய்வு நாற்காலியில் கிடந்தாலே போதும்.
அப்போது
கருப்பாய் வெளுப்பாய்
பல் நிறங்களாய்
ஆவியாய்
ஆல வட்டங்களாய்
அல்லது உருவமற்ற உருவங்களாய்...
...
சடக்கென்று விழித்துக்கொண்ட போது
கண்மூடிக்கிடந்த பிம்பங்கள்
நம் கண்ணெதிரே
கொசுக்களாய் மொய்க்கும்.
அதிலும்
சோம சுராப் பானங்கள்
நாம் குடித்திருந்தால்
கேட்கவே வேண்டாம்.
லட்சக்கணக்காய் அவை
ஒலித்துண்டுகளாய்
வாந்தியெடுக்கப்படும்.
இனி இது தான்
நம் கடவுள்கள்.
எனவே மூளைச்செதில்களின்
குழம்பல்களும்
உளம்பல்களும்
நம்மை விலங்கு மாட்டி
வைத்துக்கொள்ளும்.
சிந்தனை எனும் கோடு தீட்டிய
பாதைகள்
நம் அறிவுப்பிழம்புக்குள்
விழுந்தால் தான்
மேற்கண்ட உளம்பல்களின்
சதுப்புக்காடுக்காடுகளிலிருந்து
நாம் மீள முடியும்.
சளும்பல் அறிவை விட்டு
தெளிந்த அறிவே
மனிதனுக்கு வேண்டிய
இயல்பு அறிவு எனும் இயற்பியல்.
எனவே
எட்டு கை
இருபத்திரண்டு கால்
ஏழு முகம்
எழுபத்திர்ண்டு ஆயிரம் நாக்கு
உடம்பின் மயிர்க்கண்கள் போல
கணக்கற்ற கண்கள்
பல்லைப்பற்றி சொல்லவே வேண்டாம்.
ஆயிரம் ஆயிரம் கோரைப்பற்கள்..
போதுமா?
இது தான் உன்னை ஆளும்.
உன்னைத்திகிலூட்டும்.
உன்னைக்கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று கொண்டிருக்கும்.
சரி
போகட்டும்.
இது உன்போல் இருக்கும்
உன் உடனுறைபவர்களை
வதம் பண்ணக்கிளம்பிவிடும்.
இதைத்தான் மதம் பிடித்து விட்டது
என்று சொல்லப்படுகிறது.
இந்த மதம் எனும்
பேய் பிடியாதவர்களாய்
இருப்பது தான் மனிதம்.
என்ன?
சரியான வழியின் ஒளி
புலப்படுகிறதா?
சிந்தனை செய் மனிதா!
சிந்தனை செய்!
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக