என்ன நீங்கள்?
நயாகராவைச் சுருட்டி
சொற்களுக்குள்
வைத்திருக்கிறீர்களா?
எத்தனை உவமைகள்?
எத்தனை உருவகங்கள்?
எது எதை முந்துகிறது?
எந்த சொல் துளி முதலில்
விழுந்தது?
அதையும் தாண்டி
அதற்கு முன்னரே விழுந்த
துளி எது?
அதனுள் புகுந்து சூரியன்
ஏழு வர்ணம் விரிக்கும் மின்
உங்கள் கற்பனைக்குள்
எத்தனை ஆயிரம் வானங்கள்?
கல் பொருது இறங்கும்
மல்லல் பேர் யாறுகள்
உங்கள்
சொல் பொருது இறங்குகையில்
தமிழின் கதிர் வீசும்
மலர்ச்சியிலே
உலக மொழிகள் எல்லாம்
வாய்பிளக்கும் வியப்புண்டு.
தமிழ்ச்செம்புயலே!
ஓங்கி ஒலித்திடுக
உம் தமிழே!
___________________________________________
சொற்கீரன்
(தலைப்பு
என்னிடம்சொல்லும்முன்.....
27.12.24 ல் ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை பற்றிய கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக