நிழற்பாம்புகள்
_________________________________
எங்கிருந்தோ தீண்டினாலும்
சாவு சாவு தான்.
வானத்தயே ஓட்டை போட்டு
வைரங்கள கொட்டணும்.
அதுக்கு
இவன
அவன் போட்டுத்தள்ளணும்.
அவன
இவன் போட்டுத்தள்ளணும்.
அருவாளும் துப்பாக்கியும்
குத்தாட்டம் போடணும்.
சதை தெறிக்க
குரல் வெடிக்க
இசையில
தசையெல்லாம்
பிய்ஞ்சுடணும்
இது தாண்டா சினிமா.
இது தாண்டா வசூலு.
.....
___________________________________
கபிலவண்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக