எங்கோ சுநாமி....
எனக்கென்ன?
கண்ணை மூடி
கவிதை வரி தேடினேன்
எழுதிக்குவிக்க..
எதோ ஒரு
கொசு கடித்தது என
கண் விழித்தேன்...
எல்லாம் தண்ணீர்.
மூக்குத்துளையுள்ளும்
தண்ணீர்..
மூச்சுத்திணறினேன்.
திணறினேன்.
ணறினேன்.
றினேன்.
னேன்
ன்
அந்தப்புள்ளி மட்டும்
இன்னும் தண்ணீர் மட்டத்தில்.
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக