புதன், 11 டிசம்பர், 2024

அகழ்நானூறு 90

 

அகழ்நானூறு 90

________________________________________


அம்பூப்பழன அணிநிறை வரப்பின் 

செம்பூ முள்ளிய செறியிலை இடற‌

கடுந்தோள் வெற்பன் உழுபடை அமர்க்கண்

வென்றே குவிக்கும் பொன்னின் குப்பை

காண்குவை களிக்குவை ஒளிக்குவை 

அலரமல் ஆற்றல் அங்கண் சேயிழை.

பாம்பின் திரிதரு முட்சினை முளிபடு

கொல்மரக் காட்டின் குய்வெரீஇ நனந்தலை

இறப்பக் கூர் அழி சுரன் நெறி பிழிய‌

பொருள்வயின் கொள்ளை வேட்டனன்

மறுத்தி நெடுவயல் காட்டினை வாணுதலி.

ஈண்டு மண்திருத்தி  மணிநிறம் கிளர்த்தி

கொத்துக்குரல் நெல்லின் குவித்தனன்

செய்தி குறுமுகை முறுவல் எல்லி

முனைந்தனை முகத்து எதிர்

குமிழ்த்தன்ன நகையில் கவிழ்த்தே

அடல் செரு திண்தோள் நுங்கு செத்துக் குழையும்.

கலிமான் தழீஇய இணை மான் மருவும்

காட்சியின் மலிய களிப்பம் இவண் நீ

காண்குவை மன்னே மணிமிடை ஒளியே!

இலஞ்சி கவித்த பைந்தழைப் பசுங்குடை

போன்ம் போர்த்தனை காதல் நெய்த‌

கலிங்கத்துப் பாலாவி படர்த்தினை  காண்.

முற்றும் மறைந்தேன் உன் முற்றிய அன்பில்.


________________________________________________________

சொற்கீரன் எழுதிய சங்கநடைச்செய்யுள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக