நீ
_________________________________
சொற்கீரன்.
மனிதன் தான்
ஆனால் மனிதனில்லை.
பிறப்பான்
திடீரென்று எண்பது வயது மூத்தவனாய்
முண்டகோபநிஷடம் ஒப்பிப்பான்.
அர்த்தம் அதில் உள்ள ஒரு முற்றுப்புள்ளிக்கு
கூட
தெரியவில்லை
அந்த ரிஷி வரட்டும் என்பான்.
இதற்கே
அவனைக்கூட்டிப்போக
ரத்தினப்பல்லக்கு காத்திருக்கும்.
அதிலிருந்து இறங்குபோது
எங்கோ ஒரு சேரியின் மைந்தனாய்
சிலிர்த்து நின்று நானே சிங்கம் என்பான்.
அவன் விரலில் இந்த
உலகமே சுழன்று கொண்டிருக்கும்
அதற்காக அவன்
விஷ்ணு இல்லை என்பதை
அவனே புளுகாமல் உண்மை சொல்வான்.
அவன் யார்?
இப்படி அவனைக் கேட்ட உடனேயே
கடல் நுரை போல
நரைத்து விட்ட தாடி மீசையுடன்
வீரமாய்
க்ளாடியேட்டர் 2 ல் வரும்
ஆவேசம் ஆவான்.
அவன் எப்போது வெற்றிலை பாக்கு எல்லாம்
போட்டுக்கொண்டு
கொப்புளித்து விட்டு
இது என் லாவா என்பான் என்பது
தெரியாது.
சவுக்கை சுழற்றி
அடித்துக்கொள்வது போல் பாவ்லா
செய்து விட்டு
பார் உன்னை என்ன செய்கிறேன் பார்
என்று
பல்லை நறநறப்பான்.
உடனே
துணித்தொட்டிலிலே
குவா குவா கேட்கும்..
இப்போது தான்
பிறந்த பச்சைக்குழந்தையா?
ஆமாம்.
துணியோடு அது
ஒண்ணுக்குப் போகிறது.
தரையில் ஏதோ ஒரு
தேசப்படம்.
கோடி கோடி மக்கள்
கண்மூடி கண்திறப்பதற்குள்
எங்கும் எல்லா மூலை முடுக்குகளிலும்
ஆட்டு மந்தைகள்.
கசாப்புக்கத்திக்குள்
புகுந்து
ஓட்டெல்லாம் போடுகின்றன.
அவனே அந்த கணினிப்பெட்டி.
ஆடுகள் எல்லாம் புழுக்கைகள் போட்டு
குவியல் குவியலாய்
இமயமலைகள் கூட மறைந்து மூழ்கியது.
அவன் பனி மனிதனாய்
நான் தான் பாபா என்கிறான்.
அவன் அவதாரம் எடுக்கிறான்.
ராஜமௌலி ஒட்டி வைத்த
கிராஃபிக்ஸ் கோரைப்பற்களும்
வியாழக்கிரகங்கள் சைசுக்கு
பருத்த முண்டைக்கண்களுமாய்
பூச்சி காட்டுகிறான்.
எல்லா வாய்களும் பிளக்கின்றன.
அது சரி
இப்போது தான் இறந்தாய் என்று
உன்னை அந்த
மின் தகன "மொஹஞ்ச தரோ"
மண் மேட்டுக்கு கொண்டு போனார்கள்.
இப்போது என்ன வென்றால்
நான் பிறந்து இரண்டு மூன்று
பில்லியன் ஆண்டுகள் ஆகி விட்டது
என்கிறாய்.
இந்தா பிடி "அகர முதல".
இது இன்னும் பலப் பல பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே
ஒலித்துக்கொண்டிருக்கிறது
என்கிறாய்.
அவன்
எப்போது அந்த பூங்காவில்
ஒரு பெண்ணுக்கு முத்தம் எல்லாம்
கொடுத்து
"அவள்" ஆனான் தெரியவில்லை.
பிரவசவம் என்று
ஆயிரம் பிரபஞ்சங்கள்
உண்டு திரண்டு
அந்த மகப்பேறு மருத்தவ மனையில்
விரீர் என்று
வீல் வீல் என்று
குவா குவா என்று
ஒரு "குவாண்ட"மனிதனாய்
பல்கலைக்கழக பி ஹெச் டி காகிதங்களில்
பிறந்து நெளிகிறது.
ஆம்!மனிதா!
நீ எல்லா அண்டங்களையும்
கணித சமன்பாடுகளிலேயே
தின்று தீர்த்து
பிரசவம் என்ற பெயரில்
உமிழப்பட்ட
ஒரு மகா பிரபஞ்ச விஞ்ஞானி!
நீ உனக்குள் ஒரு செயற்கைமூளையும்
கொண்டு பிறந்து விட்டாய்.
ஒன்று சாதா.
மற்றொன்று ஸ்பெஷல்.
ஸ்பெஷல் என்றால் சாதா ஸ்பெஷல் இல்லை.
உலகத்து பல கோடி மனிதர்ளின்
"க்ராண்ட் யுனிஃபிகேஷனாய்"
அந்த "குவாண்டம் மனிதமே நீ"
_______________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக