சனி, 28 டிசம்பர், 2024

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!


கிபி யை வைத்து தான் 

கிமு என்றனர்.

கிபி இன்னும் 

ஆண்டு தோறும் ஆண்டு தோறும் 

பனி சொட்டும் டிசம்பரில் 

அன்பின் 

மானுட நேயத்தின் 

மடியில் 

அந்த மாட்டுக்கொட்டிலில் 

அவதரித்துக்கொண்டே இருக்கிறது.

சாதிகள் சொல்லி 

மனிதனை 

கண்ட துண்டமாக ஆக்கவில்லை.

பழகிப் போன சாதி வெறி 

மிச்ச சொச்சமாக இந்தியாவில் 

இன்னும் சிலுவையை 

அடையாளப்

படுத்திக்கொண்டிருந்த போதிலும் 

அந்த மனித குமாரன் 

இன்னும் அந்த சொட்டு பல்புகளில் 

வெளிச்சப்பூக்களாக 

புன்னகைத்துக்கொண்டு தான் இருக்கிறான்.

புத்தாண்டு என்றால் 

அது அந்த மனித குமாரன் 

பதியமிட்ட 

அமைதியின் 

வெள்ளை ரோசாப்பூ தானே !

எல்லோருக்கும் என் 

இனிய  புத்தாண்டு வாழ்த்துக்கள் !!


---------------------------------------------------------------------

சொற்கீரன்.


 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக