ஞாயிறு, 29 டிசம்பர், 2024

அகழ்நானூறு‍ 91

 

அகழ்நானூறு‍  91

______________________________________


ஓங்கு பருதி செந்நெல் குப்பை

பழனந்தோறும் அணிமலி காட்சியின்

சோறுடைத்து வளனே நீரொடு கலித்த‌

வளவன் நாட்டு திண் தோள் மறவன்

கையொடு கோர்த்து இலம் நீங்கு

தோகை கண்ணொடு கண்ணிணை

கசிய வாங்கு நுதலி கருவிழியாளும்

வரு நிலை கலங்கா வண்ணம் சேர்த்து

கதழ்பரி கலிமா அன்ன விரைஇ

கடும் சுரம் எதிர்த்தும் கால் பதித்தனளே.

ஆறு அலையுநர் பசுங்குடை பொதிந்த‌

வெண்ணிய சோறு மறிப்ப போலும்

பசி உழல யாங்கும் நோன்றல் இல்லாள்

பொருள்வயின் வேட்டுகம் யாம்

பொரி அறை வெம்பரல் இடறவும் 

ஈண்டு முக முகம் நோக்கி

இடர்ப்பாடு களைவம்  என்றாள் மன்.

நீள் வழியாவும் நின் நீள் விழி அன்ன‌

தண்ணிய கண்டேன் நனி கண்டேன் 

அவள் வண்ணச் சீறடியாய் யானே

தாங்கும் வன்சுரம் என்செயும்  என

 தழீச்சென்று பொள்ளாறும் பொள்ளுக‌

கடவோம் மற்று என்றான் களித்து.


_________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக