இதோ ஒரு காதல்
_______________________________________
உன்னைக்காணாமல்
இருக்கும்போது
இந்த கடிகாரங்களைத்தான்
முதலில் தூள் தூளாக்க வேண்டும்
போலிருக்கிறது.
அவை இரண்டு முட்களை
வைத்துக்கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை
கழுவேற்றுகின்றன.
சரி
எல்லாவற்றையும்
அடித்து நொறுக்கி விட்டேன்.
ஆனாலும்
இதோ உன்னை
பார்த்து விடலாம்
பார்த்து விடலாம்
என்ற
மவுனமான
அந்த "டிக் டிக்"குள்
அதே கொடும் காலப்பாம்பின்
கொத்தல்களாக்
அல்லவா மாறிப்போயின.
நீ வருவாய் என
ஏதோ ஒரு சினிமாப்பாட்டைக்கூட
மெல்லிய
ஒலிப்போதையாய்
என் மீது போர்த்திக் கொண்டிருக்கிறேன்.
ஆனாலும்
நீலமாய் இருந்த வானத்தையும்
சேர்த்து இழுத்துப்போர்த்திக்கொண்டு
காத்துக்கொண்டிருக்கிறேன்.
எல்லாமே
என்னை சூழ்ந்து கொண்டு
"நீலம் பாரித்து" விட்டது.
அது எப்படி சிதை ஆனது?
சுற்றிச் சுற்றி சுழன்றடிக்கும்
நெருப்புக்கொழுந்துகளிலும்
உன்னைத்
துருவி துருவிப்பார்த்துக்கொண்டு தான்
இருக்கிறேன்.
இனி என் அறிவை...சிந்தனையை
அந்த "எருமைக்காரனுக்கு" அடமானம்
வைத்துவிட்டு
உன்னை எதிர்ப்பர்த்துக்
காத்துக்கோன்டிருக்கிறேன்
ஏதோ ஒரு
கர்ப்ப அறையை வாடகைக்கு
எடுத்துக்கொள்ளலாம்
மீண்டும் பிறந்து
உன்னை
சந்திக்கலாம் என்று!
_____________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக