என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
திடுக்கிட்டுப்போனேன்.
குவாண்டம் கணினி எனும்
பூதம் கண்டு.
பழைய கணினிகள் சில சிக்கல் தீர்வு
அதாவது க்ரிப்டோக்ராஃபிக்
காண மில்லியன் ஆண்டுகள் கூட
ஆகுமாம்.
இந்த பூதம் சில வினாடிகளில்
விடை தந்து விடுமாம்!
இந்த பூதம் பிறக்க
கரு தந்தவன்
நீல்ஸ் போர் என்ற விஞ்ஞானி.
கூடவே
ஹெய்சன் பர்க்.
இந்த இரண்டாமவன் தான்
குவாண்டப்பூதக் குஞ்சை
கிள்ளிப்பார்த்த போது
அது
"உள்ளேன் அய்யா"
என்றும் சொல்லுமாம்.
அதை இவன் கேட்கும் முன்னரே
"இல்லை அய்யா" என்றும்
சொல்லி விடுமாம்.
இது நம்ம வடிவேலுவும்
"என்னத்தெ கன்னையா" வும்
"வரூஊஉம்..ஆனா வராஆஅதுன்னு.."
கூத்தடிச்சாங்களே..
அதே தான்.
உறுதியின்மை எனும்
"அன்செர்டெய்னிடி" கோட்பாடு.
குவாண்டம் என்பதை தமிழில்
"அளபடை" எனலாம்.
மனிதன் எதையும் வெல்ல
வேறு படை எதற்கு?
இந்த "அளபடை"போதுமே!
இந்த ஒத்தையா ரெட்டையா விளையாட்டை
அதாவது ப்ராபப்லிடியை
தகரடப்பாவில் போட்டு
குலுக்கிக்கொண்டு
மில்லியன் மில்லியன்
பிரபஞ்சங்களே நம்
கையில் அல்லது கணிதத்தில்
வைத்து வித்தை காட்டுகிறது.
இந்த இனிய புத்தாண்டு விளையாட்டுகளே
நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும்
அரும்பெரும் "வாழ்த்துக்கள்!
மீண்டும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக