செவ்வாய், 31 டிசம்பர், 2024

பொற்காலம்

 

பொற்காலம்

____________________________________________________

சொற்கீரன்


என் விரலைப்பிடித்துக்கொள்

வா என்றேன்.

வரலாறு வந்தது.

என் விரல்களை 

என் எழுத்துக்களை

பிடித்துக்கொண்டு தான் வந்தது.

என்னென்னவோ 

சொல்கிறாயே.

பொற்காலம் என்கிறாய்.

உனக்கு நீயே

பொற் குமிழிகள் ஊதுகிறாய்.

பட்டாம்பூச்சிகளை விரட்டி 

உன் விரல்களை

அலை பாய விடுகிறாய்.

உனக்கு நீயே சிரித்துக்கொள்கிறாய்.

அந்த வெடிச்சிரிப்பில்

ஒரு புது 

பெரு வெடிப்பு ஒளியை

உண்டது போல்

கிறங்கிக்கொண்டு நடக்கிறாய்

உன் விரல்கள் 

என் பிடிக்குள் வரவில்லையே.

என் விரல் தடங்களை

உற்று நோக்குகிறேன்.

ஏதேனும் எழுத்துக்களின் வாசனை

தெரிகிறதா என்று.

உன் பதினாலு வயது வரை

வரிக்கு வரி

நீ உண்டது உறங்கியது..

எல்லாம் இருந்தது.

அது என்ன உன் கோடுகள்

ஒரு புள்ளியில் நின்றன...

ஹார்மோன்களின் காடுகளில்

மின்னல் மான்கள்

துள்ளி துள்ளி ஓடுகின்றன.

பிக்காசோவின் கோணல் மாணல்களில்

உன் குழம்பிய வண்ணங்கள்

சிரித்துக்கொண்டே இருக்கின்றன.

ஆம் 

இன்னும் 

சிரித்துக்கொண்டே இருக்கின்றன.

சரி தான்.

போய் வா! குட் லக்.


______________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக