இப்படி
சீறும் தமிழன்களே
இன்றைய தேவை.
ஆனால்
பொய்மையின் புகைமூட்டத்தில்
புதையுண்டு கிடக்கிறதோ
தமிழகம்?
விடியல் வரும் எனும்
அலங்காரச்சொல்லை
குப்பையில் வீசு தமிழா!
கண்ணெதிர்ப்படும்
கயமைகளை
கண்டு நொறுக்கிடு தமிழா!
__________________________________
சொற்கீரன்
சிந்து தமிழ் சிதறு ஒலிச்
சுவடுகள் எல்லாம்
கூட்டிப்பார் தமிழா..உன்
காலப்பூ தெறித்த
மகரந்தங்களே
உலகம் யாவும்
உயிர்த்தன பூத்தன.
கொம்பு மகுடம் சூடிய
காட்டிடைத்தலைவன்
ஓவியம் ஒன்றுண்டு காண்.
அவனே காடு வளர்த்தான்
காடுகள் காத்தான்.
காட்டின் விலங்குகளுக்கு
உயிர் ஊற்றுகள் ஆனான்.
பசு பதி என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக