மொழி பெயர்ப்பு
___________________________________
வேறு என்ன என்று
இதை மொழிபெயர்ப்பது?
காற்றில் இலைகள் உரசினாலும்
காதல்.
காக்கைகள் மூக்கோடு மூக்கு
கீறிக்கொண்டாலும்
காதல்.
பட்டாம்பூச்சி சேமேன்னு
பறந்த கொண்டிருந்தாலும்
அதன் இறகுகள்
செவிட்டில் அறைவது போல்
வண்ணங்களை
நம் மீது கொப்புளித்தாலும்
காதல்.
ஏன்
எதனுடைய நிழல்கள் இவை என்று
தெரியாத
இரு நிழல்கள்
இரண்டும் அசைவில்
சேர்ந்து சேர்ந்து விலகுவது போல்
தெரிந்தாலும்
அது முத்தம் கொடுத்துக்கொள்ளும்
காதல்
ஜேம்ஸ்வெப் சொல்கிறது
இரு காலக்சிகள்
முட்டி மோதிக்கொன்டிருக்கின்றன
என்று.
நம்மாளு சொல்வது.
அது வெறும் ஊடல் தான்.
அதற்குள்
வெப்பமும் ஒளியும்
செய்யும்
"சும்மா அதிருதுல்ல..."எனக்காட்டுவதும்
காதல்.
பெருவெடிப்பு என்பதே
காதல் ஏக்கப்பெருமூச்சின்
பிரம்மாண்டவெடிப்பு...
காதல் ஒரு
கிசு கிசுப்பு போல்
கடவுளும் சைத்தானும்
பரிமாறிக்கொண்டதும்
காதலே.
ஈடன் தோட்டத்து நெருக்கடி
இன்னும் அவிழ்க்கப்படவில்லையே.
அவிழ்க்கப்படாத
ஆசை நெருப்புகளின்
மத்தாப்புக்காடுகளே
காதல்.
என்ன செய்வது?
ஆற்றோர
நாணல் கீற்றுச்
சன்னல் கம்பிகளின்
இடையே
இந்த பக்கமும்
அந்த பக்கமும்
வறக் வறக் என்று...
இரண்டு தவளைகள்
பரிமாறிக்கொள்வதும்
நிச்சயம் காதல் தான்.
காதல் தவிர வேறில்லை.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக