வியாழன், 12 செப்டம்பர், 2024

புறாணம்.

 



என்ன கவலை உனக்கு?

கவலையே இல்லாதது தான் கவலையா?

ஆமாம்.

அதிலென்ன சந்தேகம்?

கவலை இருந்தால் தான்

அது கடுகு போல் இருந்தாலும்

கனத்த பாறாங்கலாய் தோன்றி

அழுத்தி அழுத்தி

மூச்சு திணறச்செய்து அப்புறம்

அதே மூச்சுத்திணறலே

பெரும் ஆற்றாய் வீசி

அந்த பாறாங்கல் "கடுகை"

பூ வென்று ஊதித்தள்ளிவிடும்.

அப்புறம் நான்

ஒரு புத்தாக்கம் பெற்ற புது மனிதன்.

கடவுள் கூட‌

என்னிடம் அது

எப்படி எப்படி??

என்று விவரம் கேட்பார்.

போதும் நிறுத்து.

என்ன இது புதிய பூதம்?

இது எங்கிருந்து முளைத்தது?

மறுபடியும்

கடுகு இராட்சசன் ஆனான்.

மனது எனும்

பெரிய நிழல் கரிய நிழல்

நம்மை கவ்விக்கொண்டிருக்கிறது.

ஏதடா வம்பு என்று

கடவுள் நம் கண்ணிலேயே படாமல் 

காணாமல் போவார்.

மனம் எனும் திரைச்சீலையின்

ஆட்டம் தானே கடவுள்!

அந்த புறாக்கள் அந்த கோவிலில்

சிறகடித்து சிறகடித்து

மந்திரம் ஓதியதில்

கருவுற்றது தானே கடவுள்.

இதுவே கடவுள் புறாணம்.


____________________________________________________‍

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக