திங்கள், 2 செப்டம்பர், 2024

கரும்புக்காடு



உன் மகிழ்ச்சி

அந்த எல்லா எறும்புகளின் 

இனிப்பு ஊர்தல்களின்

ஒரு கரும்புக்காடு.

எப்படியோ

குமுக்கென்று

ஒரு சின்னஞ்சிறு பூ போல‌

அந்த சிரிப்பை உதிர்த்துவிட்டாய்.

அது என்ன‌

இந்த பஞ்சுமிட்டாய்த் தீயாய்

இனிமைப்பிரளமாய்

எங்கும் எதிலும் 

அலை துளிர்த்து என்னை

துவைத்து துவைத்துப்

போட்டுக்கொண்டிருக்கிறது.

சலவை நிலவுகளாய்

அது வானம் விம்மி விம்மி

என் மீது தட்டாம்ப்பூச்சியின்

கண்ணாடிச்சிறகுகளாய்

அதிர அதிர 

போர்த்திக்கொண்டிருக்கிறது.

பளிங்கின் விழுதுகள் போல்

என் அடிமனத்து ஆலமரத்தில்

நீ

ஊஞ்சல் ஆடிக்கொண்டே இரு.

அது போதும்.

நைந்து நைந்து பிழிந்து

வழியும் கரும்புச்சாறு எனும்

இந்த வயதுகளின் 

முட்காட்டிலிருந்து

நான்

பளிச்சென்று பூத்து வர.


_________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக