ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

அப்ளாஸ்!

 



அப்ளாஸ் !

____________________________________


கேளுங்கள் அந்த‌

லட்சக்கணக்கானோர்களின்

கை தட்டல்களை.

பாராட்டுப்பிரளயங்களை.

ஏன்?

எதற்கு?

அந்த தோல் கருவி

துளைக்கருவி

நரம்புக்கருவி

மனிதனின் 

தொண்டையும் நாக்கும்

ஏற்படுத்தும்

அதிர்வின் அலைகள்

இவற்றின் கூட்டுக்கசக்கலில்

காற்று கசாப்பு செய்யப்பட்டது.

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாம்!

அந்த செவிகள் அத்தனையும்

பிரம்மாண்ட அரக்கர்களின் 

வாய்களாய் மாறி

அந்த ரத்தவெள்ளத்தை ஆசைதீர 

பருகி உருகிக் கரைந்தன.

அடச்சீ! கவிஞா!

என்ன ரசனையடா உன் கவிதை?

அதோ

அந்த சீற்ற அம்புகளில் 

சல்லடையாக்கப்பட்ட‌

கவிஞனின் சடலம்.

அதே போல்

ஒரு சுநாமிக்குப் பிறகு

அதற்கு "நோட்ஸ்" எழுதிய‌

கடவுளின் 

கந்தல் சடலமும் அதோ.


நோடா பென்.....


இனி 

பேனாவுக்கு வேலையில்லை.

முறித்துப்போடுங்கள்

என்று 

சைத்தான்கள் சாட்டையை

சுழற்றிய போது

சடலமாக விழுந்தது 

பேனாவும் தான்.

மனிதம் எனும்

மலர் 

மகரந்தம் தெறிக்க‌

மறந்து போனபோது

உதவிக்கு

"ஏ ஐ"என்ற 

பூதம் வந்து 

எல்லாவற்றையும் 

அது தின்று தீர்த்தபோது...

கடைசியாக விழுந்த சடலமே

கவிதை.


___________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக