திங்கள், 23 செப்டம்பர், 2024

"திரைவியம்"

 

தமிழ் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா மொழியாகவும் இருந்திருக்கிற‌து.திரை என்னும் கடல் அலைகளைகடந்து பல மக்களின் இனக்குழுக்களோடு உறவாடி இந்த தமிழ் மொழியில் பல ஒலிவடிவங்களை உருவாக்கி இருக்கலாம்.அப்படி ஏற்பட்ட மொழிவடிங்களில் பாலியும் ஒன்று என நாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? திரை கடலோடி "திரைவியம்" தேடு என்பது வெறும் பொருள் வணிகம் மட்டும் அல்ல.மொழி வடிவங்களும் தான். இன்னும் சொல்லப்போனால் தமிழில் பல் வடிவங்களில் வழங்கும் சொல் அல்லது அசைச்சொல் "ஆர்" என்பதாகும்.இதற்கு அழகு சிறப்பு ஆற்றல் அறிவு ஆரவாரம் இன்னும் பலப்பல உணர்வுகளில் பொருள் கொள்ளப்படுகிறது.சிறப்பு எனும் பொருளில் தமிழ் ஆர் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.எனவே தமிழிலிருந்து தான் "ஆரிய" தமிழ் கிளைத்திருக்கவேண்டும்.புத்த சமணர்கள் தமிழ் ஆரியர்களே.அப்படி ஒரு பாலித்தமிழர் இந்த பாடலைப்பாடியிருக்கலாம்.அந்த மூலத்தமிழ்ப்பாடலே பாலியிலும் பாடப்பட்டிருக்கல்லம்.இது எனது ஒரு சிந்தனை தான்.இது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவேண்டும். இந்த பாலித்தமிழர்கள் புத்த சமண மரபுப்படி "சங்கம்" என்று தமிழ்ச்செயுட்களை தொகுத்திருக்கலாம்.நீங்கள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் வரும் இயற்கையான தமிழின் "ஆறு" போன்ற நடையை

உற்று நோக்கினால் தெரியும் அது தமிழ்ச்செய்யுள் என்று.இங்கிருந்து அங்கு போய் அங்கிருந்து கூட‌

இங்கும் வந்திருக்கலாம்.ஆனால் அது மொழிபெயர்ப்பு பாடல் இல்லை என்பது அந்த தமிழ்ச்சொல் யாப்பிலிருந்து தெரிகிறது.இருப்பினும் இது மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் ஆரியம் என்னும் வேரே

தமிழ்ப்பால் பட்டது தான் என்ற முடிவுக்கும் கூட நாம் வரலாம்.ஏற்கனவே திரு.நாகசாமி போன்று பெரியவர்கள் என்று முத்திரை குத்திக்கொண்டவர்கள் திருவள்ளுவர் திருக்குறளைக்கூட சமஸ்கிருத சாஸ்திரங்களிலிருந்து தமிழில் எழுதியிருக்கலாம் என்ற பொய்மைகளை தூவ விட்டிருக்கிறார்கள்.அது போல் தான் சமஸ்கிருத பிராகிருத பாலி போன்றவற்றில் தர்மசாஸ்திரங்களை இப்படி மொழி பெயர்த்து எழுதியிருக்கலாம் என்று

குழப்படி செய்யும் பொய்மைகளை பரப்பும் செயலாகவே இது இருக்கலாம்.இவர்கள் இப்படி சொல்வதற்கு அசோகர் காலத்து பிரம்மி எழுத்துக்களையும் கூட சாட்சிக்கு இழுத்திருக்கலாம்.ஆனால் அசோகர் காலத்துக்குமுற்பட்ட தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புத்த சமண சான்றோர்களுக்கு முற்பட்ட தமிழ் சான்றோர்கள் செய்யுட்களே அவர்களுக்கும் முற்பட்ட இலக்கியங்களை தந்திருக்கலாம்.கி.மு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி முத்திரைகளில் "நல்நன்" என்னும் நன்னன்"பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஏன் இப்படிச்சொல்லுங்களேன்.மரவ(மரா) மரமும் குரவ(குரா) மரமும் (இவை சங்கத்தமிழ்ச் சொற்கள்} நிறைந்த தமிழ் நிலக்காட்டின் வேடன் (வால்மீகி என்று இவர்கள் இந்த கரையான் புற்றை ச‌மஸ்கிருதத்தில் சொல்லிக்கொண்டார்கள்).அவன் எழுதிய ஏதோ அந்த குறிஞ்சித்திணக்கதையை மரன் எனும் ரமன் அல்லது ராமன் கதையாக எடுத்துக்கொள்ளக்கூடாது.ஏனெனில் ஆரியத்தமிழன் ஆன பிறகு மற்ற‌

தமிழ் இனக்குழுக்குள் எதிரிகள் ஆகியிருக்கலாம்.அதை நான்கு வர்ண பிரிவுக்குள் வைத்துக்கொண்டுஇப்படி எல்லா திரிபுகளையும் செய்து கொண்டிருக்கலாம்.கொஞ்சம் விட்டால் தமிழ் இலக்கியங்கள் அத்தனையும் திரிக்கப்பட்ட ஆரியத்தமிழ் என்றும் கூட இவர்கள் அடம்பிடிக்கலாம்.போகட்டும்.தமிழ் மொழி

உலக இனக்குழுக்களுக்கு முன் ஒலிப்பு (பயோனீயரிங்) மொழியாக இருந்திருக்கும் என்பதில் உண்மை இருக்கிறது.

__________________________________________________________________சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக