ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

அகழ்நானூறு‍ 78

 

அகழ்நானூறு‍ 78

____________________________________

சொற்கீரன்.



புல்லகத்திட்ட சில்லவிழ்வல்சி போன்ம்

வாழ்க்கை என்று பல் பல் சான்றீர்!

அழல்வாய் புக்க எவண் ஈண்டு விரைதி

என்றும் குழைக்கின்ற கவரிச்சொல் 

பல் சான்றீரே!பல் சான்றீரே!

என்னை இறந்த பல்லாறு காணின்

இறப்பும் உப்பக்கம் கண்டிசின் தெளிமின்.

கொல் அரவு அறை வேழம் கடும் முள்ளின்

வெஞ்சுரம் மீண்டு பொருள் செயும் தகைவன்.

தளர் மொழியன் அவன் அன்று அறிமதி.

தழூஉ மொழியன் தகரச் சொல்லின் 

நாவு நிரப்பல் ஓம்பும் நல்லன் வல்லன்

என் வளைநெகிழ் இறையின் பற்றி ஒற்றும்

அவன் இல் சேர் நாள் என் நற்பெரு நாளே.


__________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக