திங்கள், 9 செப்டம்பர், 2024

"அகராதி பிடித்தவன்"

 


Erode Tamilanban
3ம.நே

·
எதற்கஞ்சும் இராப்போது
இருளை விரட்டும் குரல்கேட்டா?
எதற்கஞ்சும் விதையுயிர்கள்
இறங்குமிடிக் குரல்கேட்டா?
எதற்கஞ்சும் கடல்அலைகள்
இழுத்தடக்கும்ஆழமென்றா?
எதற்கஞ்சும் காற்றுமனம்?
இறந்தவர்கள் மூச்சுவந்து
தொடும்பொழுது வந்ததென்றா?
கவிதைக்கு வெளியே
கால்கடுக்க நிற்காதே உள்ளேவா!
விடைக்கு வெளியே
வினாவைத் துரத்தாதே!
உடைக்கு வெளியே
உடம்பைத் தண்டிக்காதே!
குடைக்கு வெளியே
குறைசொல்லி மழையை
விரட்டாதே! கூப்பிடு!
ஈரோசென்வியம்35-36
10-09-2024
அதிகாலைமணி 5-25

_________________________________________________________


அன்புக்குரிய ஈரோடு தமிழ்ன்பன் அவர்களே __________________________________________ 10.09.2024


கூப்பிடும் குரலே கவிதை. "அகராதி பிடித்தவன்" கடவுளுக்கு அது புரியவில்லை. மனிதா! நீயே படை! உன் சிந்தனையே ஆயிரம் அண்டம். அன்பு சுவாசத்தின் உன் குருவிக்கூடுகளில் எல்லா குருக்களும் தோற்றுப்போன‌ குருட்சேத்திரங்களே மிச்சம். கவிக்கடலே! சிரட்டைகளில் நீச்சல் அடிக்கும் இந்த மேதாவிகளை புறந்தள்ளுங்கள்! ______________________________ சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக