ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

அன்பு மகளே!

 

மகளுக்கு ஓர் உலக தினம்

_________________________________________


அன்பு மகளே!

உனக்கு இன்று ஓர் உலக தினம்.

பூவுக்கு  போய்

பூப்போல் சிரி..பூப்போலபேசு

என்று 

சொல்வது  அதிகபிரசங்கித்தனம்.

உன்னைப்பார்த்து தான்

பூமியிலேயே

பூக்கள்

முகம் காட்ட வந்திருக்கின்றன.

முறுவலுடன்

உன் முகம் பார்த்தபோது

எல்லா இளஞ்சூரியன்களும்

நெருப்பைக்கழற்றி வெளியில் வைத்துவிட்டு

உன்னோடு

தண்ணிய பார்வையை

பகிர்ந்து கொள்கின்றன.

அப்பாவுக்கு பெண்பால் 

அம்மா.

அது போல் 

மகனுக்கு பெண்பால் 

மகள் 

என்று மடத்தனமான‌

இலக்கணக்குறிப்பா?

மகன் மகனாக மட்டும் தான்

இருக்கிறான்.

மகள் மட்டுமே

மகளாக மட்டும் இல்லாமல்

மகனாகவும் இன்னும்

அம்மா அப்பா என்று

மொத்த அன்பின் பிம்பமாக‌

பிரதிபலிக்கின்றாள்.

மகளே

நீ பிறக்கிறாய்.

நீ பிறப்பிக்கவும் செய்கிறாய்.

உலகில் 

மற்றவை எல்லாம் 

ஒளியை மறித்துக்கொண்டு

நிழல் ஏற்படுத்தும்.

மகளே!

அது எப்படி

நீ மட்டும் 

நிஜமாகவும் நிழலாகவும் 

இருக்கிறாய்.

ஆம் தாயே.

உன் இதயம் மட்டுமே

எங்களுக்கு அன்பை உயிர்க்கும்

கருப்பையாக‌

இருக்கிறது.


_____________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக