சனி, 14 செப்டம்பர், 2024

வெல்வதும் தமிழ்.

 


வெல்வதும் தமிழ்.

______________________



தமிழ் நாடு 

என்ற சொல்

கேட்கும் போதே

அங்கே

உடல் எரிகிறது.

உள்ளம் பதறுகிறது.

ஏன்?

தமிழ் மொழியின்

ஊனும் 

உயிரும்

மானம் தான்.

ஈ என இரப்பது இழிவு.

ஈயேன் என்பது 

அதை விட இழிவு.

தனி மனிதனின் மானத்தின் முன்

வானம் எல்லாம் மண்டியிடும்.

தமிழ் மொழியில் 

மனிதன் ஒற்றையாய் நின்றாலும்

மாநிலமாய் நின்றாலும்

அதன் முதுகெலும்பு நிமிர்வு மட்டுமே

கோடி பெறும்.

அதனால் 

இங்குள்ள கடவுள்கள்

மனிதனிடம் இறைஞ்சிக்கேட்கும்

மனிதா என்னைப்பாடு என்று.

அதனால்

இந்த கோவில்களின் 

கல் தூண்களும் சரி

கல் படிக்கட்டுகளும் சரி

இப்படிப்பாடியதன்

புராணங்களை மட்டுமே சொல்லும்.

நட்ட கல்லும் பேசுமோ

மனிதன் எனும் நாதம் 

உள்ளிருக்கையில்

என்று

பெருமை கொள்ளும் மனிதமே

இங்கு விஸ்வரூபம் எடுக்கும்.

தமிழின் இந்த மண்பாடே

தனிப்பெரும் பண்பாடு.

சொல்வது தமிழ்.

வெல்வதும் தமிழ்.

_________________________________________

சொற்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக