தமிழ் ஆற்றுத்தொகை
___________________________________
இடைக்காடன் (இ பரமசிவன்)
நிரை பெயரத்தந்து
மாடு காண் கொளீஇ
இலை புதை பெருங்காட்டு
கொலை மறம் படுத்து
நடுகல் துஞ்சிய 5
பெருநாட்டுத் தலைவன்
வெண்ணிப் பறந்தலை
வெள்ளிய படப்பையின்
மன்று தேய்க்கும்
மாண் இறை நீழல். 10
கழை அடர் அடுக்கத்து
மஞ்சு போர்த்த நெடுவான் தோய்
செவ்வொளி பூசிய செவ்வேள்
அன்ன நிலைஇய நின்ற மாறனை
முருகு மெய் வெறியாட்டு 15
அகற்கண் அணங்கு நோக்கிய காலை
ஆய்மயிலாளும் விழி அம்பு தீட்டி
ஓர்த்த வான் எய்யும்
கார்வை மிக்கு பொழிவின்
விசும்பும் விரிய நீர்க்கடல் 20
திரையின் அடர் படல் ஆர்க்கும்.
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில்
கொய்குரல் அரிசியோடு
களவுப்புளி அட்டு குய்புகை கமழ 25
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக