சனி, 28 செப்டம்பர், 2024

நிழல்

 

நிழல்

____________________________________

இறப்புக்குப் பின் விழும் 

உன் நிழல்

உன் பிறப்புக்கு முன்பே

பதிவாகி இருக்கிறது.

எப்படி எப்படி

சற்று விவரமாச்சொல்லப்பா?

டி எஸ் பாலையா மொழியில்

உச்சு கொட்டிக் கேட்க‌

நிறையபேர்கள் மொய்த்து விட்டார்கள்.

நீண்ட தாடியை உருவிக்கொண்டு

விழிகளை உருட்டி உருட்டி

பேச ஆரம்பித்தார்..அவர்.

"உன் தந்தை தான் அந்த நிழல்.

உன் தந்தைக்கு முன் உள் தந்தை தாயின்.."

அவர் சொல்லிக்கொண்டே போனார்

பில்லியன் பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்றார்.

பில்லியன் பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் என்றார்.

....,,

அந்த புள்ளிக்கு

இவர் புளுகும் முகங்களும்

கண்களும் 

கை  கால்களும்

இன்னும் 

கோரைப்பல் கொம்பு எல்லாம் 

சேர்த்து

பிம்பங்களின் பிசிறுகளில்

ரத்தம் சொட்ட சொட்ட‌

நிழலாட்டம் காட்டுவார்

கேட்பவர்கள் முகத்தில் ஈ ஆட வில்லை.

அப்புறம்

மதங்கள் சாதிகள் வர்ணங்கள்

இதற்கும் ஃபிஸிக்ஸ் பி எச் டி காகித‌

அந்து பூச்சிகள்

அங்குலம் அங்குலமாய் 

ஏ ஐ துப்பிய சொற்பொழிவு

அந்த அரங்கத்தை

அடியில் ஆழ்ந்து கிடந்த‌

அறியாமையை  முட்டாள்தனத்தை

அனக்கோண்டா குட்டிகளால்

நிரப்பி

அங்கும் இங்கும் நெளிய விட்டன.

உண்டியலில்

கரன்சிகள் பிதுங்கி வழிந்து

நிறைந்தன..

_____________________________________________

சொற்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக