தமிழ் ஆற்றுத்தொகை (2)
________________________________________
இடைக்காடன் (இ பரமசிவன்)
களவுப்புளி அட்டு குய்புகை கமழ 25
அவனொடு உண்டலே அருநிறை செல்வம்
என்றிவள் இல்தோய் நிலவில் முன்றில்
வண்ணச்சீறடி அளபடை எடுக்கும் அவன்
வருகையின் நெடுந்தொகைக்கு அணித்தொடை
யாத்த சொல்லொடு ஓர்க்கும் மன்னே. 30
போழ்தூண்டு ஊசியின் கைவினை விரைநர்
விரல் ஊடு இழையும் நெய்வின் நேர்த்தியில்
கட்டில் நிணக்கும் கவின் ஏர் நிகழ்வு போன்ம்
காலம் பிசைந்துறும் ஊழியின் ஊர்பு
சுரன் உழன்று கோட்டின் நத்தம் நீட்டி 35
முள்மரம் வாங்கு வன்சினை தாழ
வழி நிழல் நச்சி பொருள் வேட்டுநன்
போஒய் நோன்று பொளிபடு பெருங்கல்
அறை தொறும் அறை தொறும்
அலை பாய்ந்தனனே அவிர் பரல் ஆற்றில். 40
வாள் ஊர்தரும் ஞாயிற்றன்ன
நிழல் சுமக்கும் நாள் வீழ் ஞாலம்
மண்ணொடு நைந்து நெஞ்சம் சிதைபு
பொருள்வயின் போகிய கலித்து முகத்து
ஆர்த்தெழுந்தேகிய ஒளிமுகடு ஏந்தலின் 45
ஓங்கல் கானம் கழைநெகிழ் ஊசல்
காலொடு மின்னின் தெரியல் புனையும்
வெற்பன் நகைதூஉய் அவிழ்செறி
ஆரிடை காட்டும் முறுவல் அவள்பட்டாங்கு
ஊழி உதிர்க்கும் உதிர் ஊழி சிதார் இறைக்கும் 50
(தொடரும்)
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக