புதன், 25 செப்டம்பர், 2024

தமிழ் ஆற்றுத்தொகை (3)"

 தமிழ் ஆற்றுத்தொகை (3)

_____________________________

இடைக்காடன் (இ பரமசிவன்)




மண் முழா மறப்ப விழவு விழா 

நீள்நெடு நாள் அயர்வு கொள் வீட‌

இருங்கண் குழிசி சோறு ஆரல் இன்று

துன்பியல் பெய்த அடர்மழை அன்ன‌

அகலுள் ஆங்கண் அணிலாடி உறப்ப‌                 55

புறப்புண் நாணி வாள் வடக்கு இருக்கும்

மறம்படு வேந்து கல்லென அவிந்து

விழிகுத்தி அமர்த்த அகல் இலை ஆடா

கூர்நிழல் தந்த பாழ்சுவடு அன்ன‌

பனிப்பூத் தீக்குளி  நோன்றல்  நைந்தாள்.           60

மோரியர் திண்ணிய நெடுங்குடை சாய்த்த

ஆதனுங்கன் தழல் மறமே தமிழ் மறம் என‌

வியந்த  "கள்ளில் ஆத்திரையன்" அன்று

உரைத்த சொல்லே  போதும் போதும் அவன்

தமிழ் வீச்சு'உலக இடைகழி அறைவாய்                65

நிலைஇய'நின்ற வண்ணம் அறிமதி அறிமின்.

மன்னும் நம் மொழி மலர்வாய் மண்டிலம்

எங்கணும் செங்கதிர் பொழியும் தகைத்ததே.

பொருள்வயின் செலீஇய பொன்னம் வெற்பன்

பொதிமுகம் பொதித்த முறுவல் கண்டாள்               70

கனவின் நனவாய் நனவிடை கனவாய்

பிரிவின் நோயினும் இன்பம் இழிதரும்

வெள்ளிடை அருவியில் தோயும் தேயும்.                   73

(தொடரும்)

---------------------------------------

இடைக்காடன் (இ பரமசிவன்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக