செவ்வாய், 21 மே, 2019

டெல்லி கருத்துக்கணிப்புகள்.



டெல்லி கருத்துக்கணிப்புகள்.
==========================================================ருத்ரா

அந்த மரத்தடியில்
ஒரு கிளி ஜோஸ்யக்காரன்.
கூடவே இன்னொருவனும்
இருந்தான்.
பெட்டிக்குள் கிளி.
சின்ன பாய்.
கிளி கவ்வி எடுத்துத் தர‌
நிறைய அடுக்கிய சீட்டுக்கள்.
மற்றும் கிளிக்கு
உணவாக நெல்லுப்பொரி
சிவப்பு மிளகாய்ப்பழம்.
இத்யாதி..இத்யாதி..
டெல்லியில்
ஒரு பெரிய சாலையை ஒட்டிய‌
சின்னத்தெருவில்
அந்த அசோக மரத்தடியில்...

முதலில் ஒருவன் வந்தான்.
கிளி சீட்டை எடுத்துக்கொடுத்தது
"அச்சா ஹை! ஹனுமான் ஜி ஆயே ஹை!
ஜோஸ்யக்கரன்
உற்சாகமாக சொன்னான்.
கேட்டவனும் ரூபாயை கொடுத்துவிட்டு
சீட்டியடித்துக்கொண்டே
போய்விட்டான்.
இன்னொருவன் வந்தான்.
அவனுக்கும்
ஹனுமான் ஜி ஆயே ஹை தான்.
அடுத்து ஒருவன் வந்தான்.
கிளி
அவனுக்கும்
ஹனுமான் ஜி யைத்தான்
தூக்கிப்போட்டது.
இப்படி
ஹனுமான் ஜி கள் தான்
வந்து கொண்டே இருந்தார்
சீட்டுகளில்.
கரன்சிகள் குவிந்தன.
கிளி ஜோஸ்யக்காரனுக்கு
பரம குஷி.
கடையை  மூடீ
பாயைச்சுருட்டிக்கொண்டான் அவன்.
கூட இருந்தவன் தான்
கட்டு கட்டாய்
அந்த ஸ்பெஷல் அனுமான்
படச்சீட்டுகளை கிளிக்கு கொடுத்தவன்.
எல்லாச்சீட்டுகளிலும்
ஒரே ஹனுமான் ஜி
அவன் ஏற்பாடு தான்.
வசூல் அதிகம் தான் சார்
நன்றி
என்றான் ஜோஸ்யக்காரன்.
ஆமாம்பா
பங்கு மார்க்கெட்டில்
இன்று மூணு லட்சம் கோடிக்கும் மேல்
வியாபாரமாம்.
பொருளாதாரம் நிமிர்ந்தது.
என்று
அதைக்கொண்டாட
விருந்துக்கு கிளம்பிவிட்டான்.

அது சரி.
நெருப்பில்லாமல் புகையில்லை.
இது புகையா? நெருப்பா?
ஏற்கனவே நெருப்பு வைத்ததால் தான்
இந்த புகையா?
அல்லது
இனிமேல் தான் நெருப்பை
உள்ளே வைக்கப்போகிறார்களா?
இது "அலிபி"யா?
இல்லை "கிலி"பியா?
ஹனுமான் ஜி கள்
நம்மைக் காப்பாற்றட்டும்!

====================================================







2 கருத்துகள்:

நான் சொன்னது…

//இது "அலிபி"யா?
இல்லை "கிலி"பியா?//

ஹ...ஹ...ஹ!

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி திரு "பசி" பரமசிவன் அவர்களே

அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்

கருத்துரையிடுக