ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பறையோசை அல்ல இது!

பறையோசை அல்ல இது!
================================================ருத்ரா

சாதிவெறியின்
ஆணவக்கொலையால்
கணவனை இழந்த
பெண் "கௌசல்யா"
அவர்கள் இப்போது
நிரூபித்து விட்டார்கள்
ஒரு பெண்மையின் ஆண்மையை!
"கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்"
என்ற இளங்கோ அடிகள் கூட‌
இப்போது வாழ்த்துவார்.
பெண்மையின்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
உண்மை உண்மை பெண்ணே
நீ இனி
அந்த வெறும் நிழல் எனும்
திங்கள் அல்ல!திங்கள் அல்ல!
இந்த கண்ணகி
உடைத்த சிலம்புப்பரல்களில்
மாணிக்கமா? முத்தா?
என்ற விசாரணைகள் இப்போது  இல்லை.
மனித சம நீதியா? சாதி மத நீதியா?
என்ற பரல்கள்
உடைந்து சிதறி
சமூக நீதியின் வெளிச்சம் காட்ட‌
வந்திருக்கிறாய்
ஓ! பெண்ணே!
அந்த லட்சியத்தின்
தூரத்து இடி முழக்கத்தை
நம் அருகேயே கேட்கும்
இதய முழக்கத்தின்
பறையோசையாய் பறைசாற்றும்
இயக்கப்புயல் சக்தி அவர்களே
ஆணவக்கொலை இனி பயமுறுத்தும்
சொல் அல்ல.
சமுதாய அடி நாதத்தை
ஆவணப்படுத்த வந்த‌
இந்த பறையோசையில்
மறையப்போகிற‌
ஆதிக்க ஓசைகளை
அடித்து நொறுக்கப்போகும்
ஒரு பூகம்ப ஓசை இது.
உளுத்துப்போன அந்த‌
மறையோசைகளை
"பேயோட்ட"வந்திருக்கும்
சிந்தனை அலைகளின்
அதிரோசை இது.

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக