புதன், 12 டிசம்பர், 2018

ஐந்து மாநில தேர்தல்.

ஐந்து மாநில தேர்தல்.
==========================================ருத்ரா

"ராமா! ராமா!
குறையொன்றுமில்லை ராமா!
வேறு என்ன வேண்டும்?
ஆயிரம் அடிக்கு மேல்
உனக்கு ஒரு சிலை வேண்டும்.
பளிங்குக்கல் அடுக்கி
உனக்கு ஒரு கோவில் வேண்டும்"
என்று தான்
வடபுலத்தவர்கள் இருக்கிறார்கள்
என தப்புக்கணக்கு அல்லவா
போட்டிருந்தோம்.
ஆனால்
"ஜனநாயகச்சீதையை"
தீக்குளிக்க அல்லவா
"சதிகள்" தீட்டினார்கள்
என்று அவர்கள் புரிந்துகொண்டு
சதிகாரர்களை
சரிவுக்குள் தள்ளி விட்டார்களே !
"கோத்ரம் இல்லாத
அற்ப பதர்களை
நாட்டைவிட்டே ஓட்டுவோம்"
என்று
அனுமார் வாலில்
தீயைக்கொளுத்தி அல்லவா
தேசமெங்கும் பரப்பினார்கள்.
ராமன் என்றால்
அன்பானவன்?
அவன் எப்படி
வம்பானவன் ஆவான்?
ராமாயண இதிஹாசங்கள்
முன்னூறுக்கும் பேல் இருப்பதாக‌
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால்
இது ஒரு புதிய ராமாயணம்.
பூமிக்குள்ளிருந்து வந்த சீதை
இவர்கள் கணக்குப்படி
பட்டியல் இனத்தவள் தானே.
அதனால் தான்
அசோகவனத்தில் கற்போடு
இருந்தவள் மீதும்
பழிச்சொல் வீசவைத்து
தீக்குளிக்க வைத்தார்கள்.
"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்"
என்று
மண்ணுக்கடியில் பிறந்தவள்
மன்னனை காத‌லிப்பதா?
என்று ஒரு சனாதன சாணக்கியன்
கடைசி வரை காத்திருந்து
பழி வாங்கியிருக்கலாம்.
நுழைந்து பார்த்தால்
நுட்பமாய் நுணுகிப் பார்த்தால்
அந்த பழைய ராமாயணம்
ஒரு "ஆணவக்கொலையின்"
ஆதி இதிஹாசம் என்று
சொல்லலாமோ?
சொல்ல‌லாமோ என்ன?
சொல்லியே விட்டார்கள்!
பழைய கதைப்படி
அந்த வில் முறிய விடாமல்
இந்த ஜனநாயக ராமர்கள் ஓட்டுகளில்
வில் வளைத்து அம்பெய்தி
ராமர் முகமூடி போட்ட அசுரர்களை
வதம் செய்து விட்டார்கள்.
வால்மீகிகளே
நீங்கள் கரையான் புற்றிலிருந்து
வந்தவர்கள் அல்ல!
வியர்வையின் கடல் அலைகளிலிருந்து
வந்து
இந்த தேசத்துக்கு உரம் ஏற்றியவர்கள்.
மானிட நேயத்து
புதிய இதிகாசங்களே
இனி உங்கள் முழக்கங்கள்!

====================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக