மின்னற்பீலிகள்(6)
====================================ருத்ரா
"எப்போதோ
ஒரு வெள்ளியிழையை
பளிச்சென்ற சிரிப்பாய்
அவள் என் மீது வீசினாள்
அதன் பிறகு
எத்தனை தடவை?...
எத்தனை தடவை ?...
எத்தனையோ தடவைகள்....?
அவள் வாய் திறப்பாள்
என்று
அவள் கண்பார்த்தேன்.
அவள் இமைகள் கூட
திறக்கவில்லையே.
ஒரு கனவின் கீற்றாய்
அவள் இதழ்கள் பிரியும்
என பார்த்தேன்.
இறுகி அல்லவா கிடந்தன
அந்த பவளத்திட்டுகள்.
அலிபாபா குகை போல்
பாறாங்கல் மூடிக்கொண்டன
பல வருடங்களாய்."
...........................
...........................
எப்போதோ திறக்க வேண்டிய
என் சொல்
இன்று அவன் "கவிதைக்கு"
"லைக்" போட்டது.
சூடான கண்ணீர்த்துளிகளையும்
சேர்த்து.
ஏம்மா ?அழுவுற .
என் இரண்டு வயது
குட்டிப்பெண் கேட்டாள்.
=================================================
====================================ருத்ரா
"எப்போதோ
ஒரு வெள்ளியிழையை
பளிச்சென்ற சிரிப்பாய்
அவள் என் மீது வீசினாள்
அதன் பிறகு
எத்தனை தடவை?...
எத்தனை தடவை ?...
எத்தனையோ தடவைகள்....?
அவள் வாய் திறப்பாள்
என்று
அவள் கண்பார்த்தேன்.
அவள் இமைகள் கூட
திறக்கவில்லையே.
ஒரு கனவின் கீற்றாய்
அவள் இதழ்கள் பிரியும்
என பார்த்தேன்.
இறுகி அல்லவா கிடந்தன
அந்த பவளத்திட்டுகள்.
அலிபாபா குகை போல்
பாறாங்கல் மூடிக்கொண்டன
பல வருடங்களாய்."
...........................
...........................
எப்போதோ திறக்க வேண்டிய
என் சொல்
இன்று அவன் "கவிதைக்கு"
"லைக்" போட்டது.
சூடான கண்ணீர்த்துளிகளையும்
சேர்த்து.
ஏம்மா ?அழுவுற .
என் இரண்டு வயது
குட்டிப்பெண் கேட்டாள்.
=================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக